தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் உயர்ந்து வந்தது. குறிப்பாக இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத மாற்றங்களைச் சந்தித்த தங்கம், நேற்று முன்தினம் சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயைக் கடந்து அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ. 9,080 உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு முறை விலை மாற்றமடைந்து, சவரனுக்கு ரூ. 4,120 வரை அதிகரித்தது. இதனால் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1,15,320 என்ற உச்சபட்ச விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய உயர்வைக் கண்டு கலக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு, இன்றைய விலை சரிவு சிறிய நிம்மதியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இன்றைய நிலவரம்: சவரன் ரூ. 1.13 லட்சம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,720 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ. 215 குறைந்து, ரூ. 14,200-க்கு விற்பனையாகிறது. உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று சற்று இறக்கம் கண்டுள்ளதால், நகைக்கடைகளில் மீண்டும் ஓரளவிற்கு மக்கள் நடமாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலையும் சரிவு
தங்கத்தைப் போலவே உயர்ந்த வெள்ளி விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,45,000-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 3,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7