தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில், அக்கட்சிக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்குப் பிடித்த 'விசில்' சின்னம்
தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட் மற்றும் விசில் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதில் 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டதற்குப் பின்னணியில் சுவாரஸ்யமான காரணங்கள் இருப்பதாகத் தவெக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் வெற்றிப் படங்களான 'பிகில்' மற்றும் 'கோட்' (GOAT) படங்களில் விசில் அடிப்பது போன்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் மக்களிடையே மிகவும் பிரபலம். பிகில் படத்தில் அவர் கபடி பயிற்சியாளராக விசிலுடன் வலம் வருவார். இந்தத் தொடர்புகள் காரணமாக, 'விசில்' சின்னத்தை மக்களிடம் மிக எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் என அக்கட்சி நம்புகிறது.
உறுதியான நான்கு முனைப் போட்டி
விஜய் தனது கட்சிக் கொள்கையை அறிவித்தபோது, கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது நிலவும் அரசியல் சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கூட்டணிகளிலும் பெரும்பாலான கட்சிகள் இணைந்துவிட்டன. இதனால் வரும் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
கமலின் மநீம-விற்கு டார்ச் லைட்
இதேவேளையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சிக்கும் 'டார்ச் லைட்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த தேர்தல்களில் மநீம அதே சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இந்தச் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 2026 தேர்தல் களம் இப்போது சின்னங்கள் ஒதுக்கீட்டுடன் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

LIVE 24 X 7