Raghu Thatha Movie Review in Tamil : கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் எப்படி? பார்க்கலாமா? ரசிக்கலாமா?

Raghu Thatha Movie Review in Tamil : இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் கீர்த்தி சுரேஷ், இந்தி பரீட்சை எழுதி வங்கி வேலையில் பதவி உயர்வு பெற நினைப்பது ஏன் என்பது ரகுதாத்தா கதை. கீர்த்தி சுரேஷ் நடிப்பு, கொஞ்சம் காமெடி ஓகே. படம் ஹிட்டா?

Aug 15, 2024 - 15:47
Aug 16, 2024 - 09:54
 0
Raghu Thatha Movie Review in Tamil : கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் எப்படி? பார்க்கலாமா? ரசிக்கலாமா?
Raghu Thatha Movie Review in Tamil

Raghu Thatha Movie Review in Tamil : சுமன்குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் ரகுதாத்தா. படம் எப்படி? இதோ விமர்சனம்

ராகு தாத்தா விமர்சனம் :-

1970களில் ரகு தாத்தா கதை நடக்கிறது. எம்.எஸ்.பாஸ்கரின் பேத்தி கீர்த்தி சுரேஷ்(Keerthy Suresh), இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக இருக்கிறார். இந்தி ஆதரவாளர்களின் பகையை சம்பாதிக்கிறார். அதேசமயம், ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். அவருக்கு தாத்தா(Raghu Thatha) துணையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில்  தாத்தாவுக்கு கேன்சர் வர, சூழ்நிலை காரணமாக ரவீந்திர விஜயை திருமணம் செய்ய நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அவரே ஒரு கட்டத்தில் தனது திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார். இந்திக்கு எதிராக போராடியவர் இந்தி பரீட்சை எழுதி வங்கியில் பதவி உயர்வு பெற நினைக்கிறார், இதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது  என்பதை சற்றே காமடெி கலந்து சொல்கிறது கதை

1970களில் இருக்கும்  இளம் பெண்ணாக, அழகாக இருக்கிறார் கீர்த்தி(Raghu Thatha Review). அதேசமயம், இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆணாதிக்கத்துக்கு  எதிரான மனநிலை, எதை தை ரியமாக பேசும் புரட்சி மனப்பான்மை என வலுவான கேரக்டரில் முத்திரை பதித்தும் இருக்கிறார்.  குறிப்பாக, தன்னை  பெண் பார்க்க வரும் காட்சியில், திருமண நிச்சயதார்த்த காட்சியில் அவர் பேசும் வசனங்கள், நடிப்பு செம, கிளை மாக்சில் திருமண வீடு சீனில் அவரின் நடிப்பு கை தட்டல் வாங்க வைக்கிறது.

மேலும் படிக்க : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான்..... சுடச்சுட விமர்சனம் இதோ!

வங்கி சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒரளவு காமெடி இருப்பது ஆறுதல்.  வங்கி அதிகாரியாக வரும் ராஜீவ், தே வதர்ஷினி, அந்த இந்தி உதவியாளர், டாக்டர் சம்பந்தப்பட்ட சீன்கள் ஓகே. ஆனால், படம்  நாடகத்தன்மையுடன் மெதுவாக  நகர்வது பெ ரிய மைனஸ். 
இந்தி எதிர்ப்பு சம்பந்தப்பட்ட கதை, ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று நினைத்தால்  ஏமாற்றமே மிஞ்சுகிது. 

இன்றைய தலைமுறைக்கு அந்த கால இந்தி எதிர்ப்பு சீன்கள் கனெக்ட் ஆகுமா என்று இயக்குனர் ஏனோ  யோசிக்கவில்லை.
ரந்திர விஜய் நடிப்பு, அவர் சீன்கள் ஓகே. பாடல்கள் ரொம்ப சுமார். ஆங்காங்கே காமெடி இருந்தாலும், படம் நிறைவை தரவில்லை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow