Speaker Appavu : உதயநிதி காயாக உள்ளார்.. பழுக்க வேண்டியது தான் எஞ்சியுள்ளது.. சபாநாயகர் சூசகம்

Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலின் விதையாகி செடியாகி மரமாகி தற்பொழுது காயாக உள்ளார் பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Aug 15, 2024 - 15:31
Aug 16, 2024 - 09:54
 0
Speaker Appavu : உதயநிதி காயாக உள்ளார்.. பழுக்க வேண்டியது தான் எஞ்சியுள்ளது.. சபாநாயகர் சூசகம்
சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அப்பாவு(Appavu), “ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆளுநரோடு கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் ஆளுநர் என்கின்ற அமைப்பிற்கு மரியாதை தர வேண்டும். எனவே முதல்வர் பங்கேற்கிறார். அதில் நான் பங்கேற்றாலும் தவறு ஒன்றும் இல்லை.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக(Udhayanidhi Stalin) பதவி ஏற்பதில் தவறில்லை. அவர், விதையாகி, செடியாகி, மரமாகி தற்பொழுது காயாக உள்ளார். பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது. 19ஆம் தேதி துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்பாரா என்பதை முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு தேசிய தலைவர். அந்த அடிப்படையிலேயே பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்படுகின்ற, நாணய வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திராவிட கொள்கையின் பெயராலும், மொழியாலும் மக்கள் பிளவுபடுத்தப்படுகின்றனர் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதை ஆளுநர் தவிர்த்து இருக்க வேண்டும். திராவிட மாடல் என்பது அனைவருக்கும் எல்லாம் ஏற்கின்ற கொள்கையை கொண்டது” என்று அப்பாவு தெரிவித்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர்(Deputy Chief Minister) வழங்கப்படலாம் என ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து இருந்து வருகிறது.

இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கையில், "துணை முதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்து வருகிறது; ஆனால் அது பழுக்கவில்லை" என்று பதிலளித்தார்.

இதற்கிடையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Deputy Chief Minister Udhayanidhi Stalin)’ என குறிப்பிட்ட அவர், பிறகு சுதாரித்துக் கொண்டு, “19ஆம் தேதிக்குப் பிறகுதான் அப்படி கூற வேண்டும்” என்றார்.

அதற்குப் பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின் என சூசகமாக தெரிவித்தார். அதேபோல, பிற திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதலமைச்சர் பதவியை வழங்குவதில் தவறேதும் இல்லை என்றும் அதற்கு அவர் தகுதியானவர் என்றும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow