77வது சுதந்திர தினம்..இல்லந்தோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவோம்.. பிரதமர் மோடி அழைப்பு

இந்தாண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு மீண்டும் ஹர் கர் திரங்கா மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Aug 9, 2024 - 14:37
Aug 9, 2024 - 21:09
 0
77வது சுதந்திர தினம்..இல்லந்தோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவோம்.. பிரதமர் மோடி அழைப்பு
PM Modi urges citizens to make har ghar tiranga campaign

சென்னை: இந்தாண்டு சுதந்திரதினம் நெருங்கி வருவதால், மீண்டும் ஹர் கர் திரங்கா மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன். இதன்மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் மோடி கூறியுள்ளார். இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் பட பகுதியில் மூர்வணக் கொடி படத்தை வைப்பதையும், தங்கள் வீடுகள், தெருக்களில் மூர்வணக்கொடியை ஏற்றுவதையும் இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.

சுதந்திர தினத்தில் தேசியக் கொடியுடன்  செல்ஃபி எடுத்து பதிவிடவும்..தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய எக்ஸ் தளத்தின் தன்னுடைய முகப்பு பக்கத்தில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி இதுகுறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்தாண்டு சுதந்திரதினம் நெருங்கி வருவதால், மீண்டும் ஹர் கர் திரங்கா ( இல்லந்தோறும் மூவர்ணக்கொடி) இயக்கத்தை மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம். 

நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன். இதன்மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆம், உங்கள் தற்படங்களை(செல்ஃபி) https://harghartiranga.com இல் பகிரவும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தங்களின் சமூக வலைத்தள முகப்புப் படங்களை மாற்றி உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow