மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாட் பகுதியில் உள்ள கோந்தவலே கிராமத்திற்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் மூன்று பணியாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Pune Helicopter Crash : குளோபல் வெக்ட்ரா ஹெலிகார்ப் லிமிடெட் (ஜி.வி.ஹெச்.எல்) நிறுவனத்திற்கு சொந்தமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் 139 (ஏடபிள்யூ 139) ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாட் பகுதியில் உள்ள கோந்தவலே கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. GVHL நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனங்களில் ஒன்றாகும். சிறிய இலகுரக ஹெலிகாப்டர்கள் முதல் நடுத்தர அளவிலான இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் வரை 29 விமானங்களைக் கொண்டுள்ளது. ஜிவிஹெச்எல் தலைமையகம் மும்பையில் உள்ள ஜூஹூ விமான நிலையத்தில் உள்ளது.
ஹெலிகாப்டரை இயக்கிய கேப்டன் ஆனந்த் காயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹெலிகாப்டரில் பயணித்த வீர் பாட்டியா, அமர்தீப் சிங் மற்றும் எஸ்பி ராம் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மும்பையில் உள்ள ஜூஹூ தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்தது தெரிந்த உடன் அங்கு டிரெக்கிங் செய்ய வந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தொடங்கினயுள்ளனர்.
இதுகுறித்து பாட் காவல் நிலைய ஆய்வாளர் மனோஜ் யாதவ் கூறுகையில், ”ஹலிகாப்டரில் பைலட் மற்றும் துணை விமானி மற்றும் இரண்டு பொறியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டர் முல்ஷி என்ற பகுதியை அடைந்த போது கனமழையின் காரணமாக திக்குமுக்காடியது ஹலிகாப்டர்.
மோசமான வானிலையை தாக்குப்பிடிக்கமுடியாமல் உயரத்தை இழந்த ஹெலிகாப்டர் வனப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்", என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!
மேலும், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் போது பயங்கரமான சத்தம் கேட்டதாக அருகில் உள்ள ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை பார்த்த ஊர் மக்கள், அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.