கார்கில் விஜய் திவாஸ் வெள்ளி விழா.. தேசம் காக்கும் வீரர்களுடன் கார்கிலில் கொண்டாடும் மோடி

PM Modi Visit 25th Kargil Vijay Diwas 2024 : கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சிகளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். கார்கில் திராஸில் போர் வீரர்கள் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி

Jul 25, 2024 - 18:19
Jul 26, 2024 - 10:06
 0
கார்கில் விஜய் திவாஸ் வெள்ளி விழா.. தேசம் காக்கும் வீரர்களுடன் கார்கிலில் கொண்டாடும் மோடி
PM Modi Visit 25th Kargil Vijay Diwas 2024

PM Modi Visit 25th Kargil Vijay Diwas 2024 : கார்கில் வெற்றி தினத்தின் (கார்கில் விஜய் திவாஸ் 2024) வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். கார்கில் திராஸில் போர் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார். பின்னர் கார்கில் திராஸ் எல்லைப் பகுதியில் தேசம் காக்கும் வீரர்களுடன் கலந்துரையாடி இனிப்புகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது. கடும் குளிரிலும் கொட்டும் பனியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் தீரத்தோடு எதிர்த்து போரிட்டு விரட்டியடித்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சிகளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். கார்கில் திராஸில் போர் வீரர்கள் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கு எல்லையை பாதுகாக்கும் வீரர்களுடன் கலந்துரையாடி இனிப்புகளை வழங்குகிறார் பிரதமர் மோடி.

இதனைத் தொடர்ந்து ஷின்குன் லா சுரங்கப்பாதைத்  திட்டத்தை பிரதமர் மோடி மெய்நிகர் வடிவில் தொடங்கிவைக்க உள்ளார்.ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லே பகுதிக்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு – படும் – தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும்.

இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2022ஆம் ஆண்டு கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய மோடி, 
கார்கிலில் நடந்த யுத்தம், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ராணுவ வீரர்களின் மத்தியில் இருப்பது தனது தீபாவளியை சிறப்பாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் நமது படை, பயங்கரவாதத்தை முறியடித்தது. அதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். நான் இங்கு வந்தபோது ராணுவ வீரர்களுடன் நான் இருக்கும் என்னுடைய பழைய புகைப்படங்கள் காட்டப்பட்டன. அதற்காக நான் அவர்களுக்கு நன்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.கார்கில் விஜய் திவாஸ் கொண்டாட கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow