Virat Kohli One8 Restaurant in Hyderabad : இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலிக்கு சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனால் முன்னணி பிராண்ட்களின் விளம்பரங்களில் கோலியை நடிக்க வைக்க பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன. இதன் மூலமே விராட் கோலி பல நூறு கோடிகளை சம்பாதித்து வருகிறார். இந்தியாவின் பல மெட்ரோ சிட்டிகளிலும் விராட் கோலிக்கு வீடுகளும் பிளாட்களும் உள்ளன. அதேபோல், ஆடி கார் நிறுவனத்தின் விளம்பர மாடலாகவும் கோலி கலக்கி வருகிறார். இதெல்லாம் போதாது என தனியாக ரெஸ்டாரண்ட்கள் நடத்தி வருகிறார் கோலி.
விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் பாலிவுட்டின் டாப் ஹீரோயின் என்பதால், பல கோடிகளை ரெஸ்டாரண்ட் தொழில் முதலீடு செய்து வருகின்றனர். இவர்களின் ஒன் 8 ரெஸ்டாரண்ட், செயின் வடிவில் பல நகரங்களிலும் கிளைகளாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 7 கிளைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஹைடெக் சிட்டியான ஐதராபாத்தில் எட்டாவதாக ஒன் 8 ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரண்டிற்கு ஐதராபாத் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள லாஃப்ட் பில்டிங்கின் முதல் மாடியில் திறக்கப்பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்ட், அங்கு செல்லும் வாடிக்கையாளர்களின் செல்ஃபி ஸ்பாட்டாகவும் காணப்படுகிறது. அந்தளவிற்கு இண்டீரியரிங் டிசைனிங்கில் பார்த்து பார்த்து தரமாக செய்துள்ளனர். முழுக்க முழுக்க லைட் பிரவுன் கலரில் பழிங்கு கற்கள், அட்டகாசமான பர்னிச்சர்ஸ், ஷோபா செட், கலர்ஃபுல் லைட்டிங், சாய்வாக சுழலும் ஃபேன்கள், போட்டோஸ், இன்டோர் கார்டன் என வாடிக்கையாளர்கள் திரும்பிய பக்கமெல்லாம் மனதை சொக்க வைக்கும் அளவிற்கு ரம்மியமாக காணப்படுகிறது ஒன் 8 ரெஸ்டாரண்ட்.
இண்டீரியர் மட்டுமில்லாமல் உணவுகளிலும் ஏராளமான வெரைட்டிகள் உள்ளன. அதாவது சர்வதேச அளவிலான ஒரு கலவையான மெனுவை தயாரிப்பதில் ஒன் 8 தனித்து நிற்கிறது. மஸ்ரூம் க்ரீம் சீஸ் கூக்லி, கீமா கோட்டாலா, பீட்ரூட் ஜூஸ் உடன் சேர்ந்து தயாரிக்கப்படும் சீஸ் உணவு, பீட்ஸா, பிரியாணி, அனைத்துவிதமான பாஸ்தா வகைகள், விதவிதமான சூப் வகைகள், பட்டரில் செய்யப்படும் டெலிஷியஸ் உணவுகள், சுஷி பிரியர்களுக்கு ஸ்க்விட், ஈல், சால்மன் போன்ற கடல் உணவுகள் பிடித்தமானது. அதேபோல் வெஜிடபிள் உணவு பிரியர்களுக்கான டெம்புரா சுஷி ஆகியவையும் அங்கு கிடைக்கின்றன.
அதேபோல், விஸ்கி, ரம், மெக்ஸிக்கன் காக்டெய்ல் போன்ற விலையுயர்ந்த மதுபானங்களும் ஒன் 8 ரெஸ்டாரண்ட்டில் கிடைக்கின்றன. மியூசிக் பார்ட்டியும் நடைபெறுவதால் அனைத்து வயதினரும் தேடி வரும் இடமாக ஒன் 8 உருவாகியுள்ளது. இந்த ரெஸ்டாரண்ட் குறித்து செஃப் அக்னிப் முடி கூறுகையில், எங்கள் ஒன் 8-ல் விராட் கோலிக்கு பிடித்த உணவுகளும் மெனுவில் இடம் பிடித்துள்ளன. அதேபோல், உள்ளூர் ஸ்பெஷல் உணவுகளையும் மெனுவில் வைத்துள்ளோம் என்றுள்ளார். ஹைதராபாத்தில், டபுள் சிக்கன் ரோஸ்ட், இறால், பன்னீர் உணவுகளில் மசாலாப் பிரிவைச் சேர்த்துள்ளோம். மேலும், ஹைதராபாத் கட்டி தால், அண்டா கீமா, பாவ் போன்ற உள்ளூர் விருப்பங்களும் உள்ளன. ஐதராபாத் ஃபேவரைட்டான ஹலீம் உணவை, சோயாவில் செய்து பரிமாறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35,000 அபராதம்
அதேபோல், பியாட்கி மிர்ச்சி பன்னீர், லெமன் சில்லி ஊறுகாய், காரமான இறால் ஆகியவையும் இங்கு தயார் செய்யப்படுகிறது. பச்சை மிளகாயை பயன்படுத்தி ஊறுகாய், லெமன் இறால்கள், கறி-பட்டா தட்கா போன்ற உணவுகளும் கோலியின் ஒன் 8 ரெஸ்டாரண்டில் தயாரிக்கப்படுவதாக செஃப் அக்னிப் முடி தெரிவித்துள்ளார். இங்குள்ள மெனு அனைத்தும் நவீன இந்திய, ஆசிய கான்டினென்டல் உணவுகளின் கலவையாக தயார் செய்யப்படுகின்றன. கத்தி பருப்பு, மட்டன் ரோகன் ஜோஷ், ஸ்லைடர்கள், லக்சா, ஹாக்கர்-ஸ்டைல் நூடுல்ஸ் போன்ற சர்வதேச உணவுகளும் இங்கு கிடைக்கின்றன. அதேபோல், ஸ்பாகெட்டி அக்லியோ இ ஒலியோ, பென்னே வறுக்கப்பட்ட சால்மன் போன்ற சில உன்னதமான உணவுகளும் மெனுவில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எல்லாவற்றையும் விட இந்த ரெஸ்டாரண்டில் உள்ள விராட் கோலியின் 18 நம்பர் ஜெர்ஸி ரசிகர்களுக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.