Nisha Dahiya : கை வலியோடு விளையாடி தோல்வி.. மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா கண்ணீர்விட்டு அழுத தருணம்

Nisha Dahiya Loses Quarter Final in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 10ஆவது நாளன்று நடைபெற்ற மகளிருக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறினார்.

Aug 6, 2024 - 11:39
Aug 6, 2024 - 13:13
 0
Nisha Dahiya : கை வலியோடு விளையாடி தோல்வி.. மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா கண்ணீர்விட்டு அழுத தருணம்
Nisha Dahiya Loses Quarter Final in Paris Olympics 2024

Nisha Dahiya Loses Quarter Final in Paris Olympics 2024 : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த ஒலிம்பிக்ஸ் 2024 திருவிழாவில் இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.மகளிருக்கான மல்யுத்தப்போட்டியில் ப்ரீஸ்டைல் 68 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா(Nisha Dahiya) காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறினார்.

மேலும், நீச்சல், குதிரையேற்றம், ரோவிங், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன் என்று அனைத்திலும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 10ஆவது நாளான இன்று மகளிருக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மல்யுத்த போட்டியில் ப்ரீஸ்டைல் 68 கிலோ பிரிவில் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான நிஷா தஹியா உக்ரைன் நாட்டைச் சேர்ந்த டெட்டியானா ரிஷ்கோவை எதிர்கொண்டார்.

இதில் நிஷா தஹியா(Nisha Dahiya) 6-4 என்று வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து இரவு 7.50 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நிஷா தஹியா வட கொரியா நாட்டைச் சேர்ந்த பாக் சொல் கம் உடன் மோதினார். இதில் 8-1 என்று முன்னிலை வகித்த தஹியா கையில் காயம் அடைந்தார்.

இதனால் வலியால் துடித்த தஹியாவைப் பார்த்து எதிரணி வீராங்கனை கூட கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதையடுத்து மருத்துவர் வந்து தஹியாவை கையை பரிசோதனை செய்து கையில் பேண்டேஜ் ஒட்டியுள்ளார். தொடர்ந்து அவரால் விளையாட முடியவில்லை. அதன் பிறகு அபாரமாக விளையாடிய பாக் சொல் கம் 10-8 என்று வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நிஷா தஹியா கை வலியை தாங்க இயலாமலும் பதக்கக் கனவு தகர்ந்த வேதனையை தாங்க முடியாமலும் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவர், இந்தக் காலிறுதிப் போட்டியை நான் முழுமையாகப் பார்த்தேன்.  ஆட்டம் முடிய 70 விநாடிகள் இருந்த போது அவருடைய கைகளில் கடுமையான வலி.  அப்போது நம்மவர் பாயிண்ட் 8.  வடகொரியப் பெண்ணின் பாய்ண்ட் 2.

உடனடி சிகிச்சையால் எந்தப் பலனுமில்லை(Nisha Dahiya Injury).இருந்தாலும் நாற்பது விநாடிகளை சமாளித்துவிட்டார்.  கைகள் இழுபட்டதில் இன்னும் ஆபத்தாகிப் போனது. மீண்டும் கடுமையான வலி.இம்முறை அழ ஆரம்பித்துவிட்டார்.வெறும் முப்பது நொடிகள் காலம் கடத்தினால் கூட செமி ஃபைனல். ஆனால் அவரால் இயலவில்லை.  வாக் அவுட் செய்யத் துடிக்கிறார், ஆனால் எத்தனை வருடக் கனவோ பாவம்.  வெளியே கோச் சமாளி சமாளி இன்னும் கொஞ்சம்தான் என்று வாட்ச்சை சுட்டிக் காட்டி கத்திக் கொண்டிருந்தார்.

வேறு வழியேயில்லாமல் கிட்டத்தட்ட ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டியச் சூழலில் தற்கொலை செய்துக் கொள்வதைப் போல களத்துள் புகுந்தார். எதிரே இருந்த வடகொரியர் நம்மாளுடைய பலவீனத்தை நன்கு உள்வாங்கி, நேரத்தையும் கணக்கிட்டு, மூன்று முறை மிக எளிதாகப் புரட்டி புரட்டிப் போட்டு ஒரே அடியாக ஒன்பது பாயிண்ட்களை இருபது நொடிக்குள் பெற்றார்.கண்ணெதிரே ஒரு பதக்கக் கனவு தகர்ந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow