MLA Essaki Subbiah : அந்தமானுக்கு டூர் போன அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா.. அசோக் நகர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்

Ambasamudram MLA Essaki Subbiah : அந்தமானிற்கு குடும்பத்தோடு சென்றிருந்த எம்எல்ஏ வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Aug 14, 2024 - 09:20
Aug 15, 2024 - 09:59
 0
MLA Essaki Subbiah : அந்தமானுக்கு டூர் போன அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா.. அசோக் நகர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்
Ambasamudram MLA Essaki Subbiah

Ambasamudram MLA Essaki Subbiah : அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா அந்தமானுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் சென்னை அசோக் நகர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அம்பை தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா. இவருக்கு சென்னை அசோக் நகர் சுந்தர பாண்டியன் தெருவில் வீடு இருக்கிறது. அங்கு அவரது மகன் இசக்கி துரை வசித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி இசக்கி துரை தனது தந்தையும் எம்எல்ஏவுமான இசக்கி சுப்பையா மற்றும் குடும்பத்தினருடன் அந்தமான் சென்றனர். அப்போது 12 ஆம்தேதி அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி வீட்டு பணிப்பெண் இசக்கி துரைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். 

உடனே அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத நபர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து 4 மாடிகளுக்கும் சென்று விட்டு மொட்டை மாடியில் சென்றதாக தெரிந்தது. பிறகு வீட்டு பணியாட்கள் அந்த நபரை எச்சரித்து வெளியே அனுப்பியது தெரிந்தது. 

இது குறித்து இசக்கி துரை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர் யார் என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து அதிமுக உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் இசக்கி சுப்பையா. சட்டத்துறை அமைச்சராக சிறிது காலம் பொறுப்பு வகித்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது  இசக்கி சுப்பையா, டிடிவி தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டார். 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது இவரது குடும்பத்திற்கு சொந்தமான குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில்  உள்ள ரிசார்ட்டுகளில் முக்கிய ஆலோசனைகள் நடந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு  அதிமுகவில் மீண்டும் இணைந்தார் இசக்கி சுப்பையா. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow