Hair Care Tips : மழைக்கால முடி பராமரிப்பு; பிரபல அழகு துறை நிபுனர் கூறுவது என்ன?

Monsoon Season Hair Care Tips in Tamil : மழைக்காலத்துல தலைமுடியை பாதுகாக்க என்னேன்ன செய்யனும்? என்னென்ன பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்று பிரபல முடி மற்றும் அழகு துறை நிபுனர் ஜாவத் ஹபிப் கூறுவதை கீழே பார்க்கலாம்.

Aug 14, 2024 - 07:42
Aug 15, 2024 - 09:59
 0
Hair Care Tips : மழைக்கால முடி பராமரிப்பு; பிரபல அழகு துறை நிபுனர் கூறுவது என்ன?
மழைக்கால முடி பராமரிப்பு

Monsoon Season Hair Care Tips in Tamil : கொளுத்தும் வெயில் காலம் முடிந்து தற்போது குளுகுளுவென மழைக்காலம் தொடங்கிருச்சு. என்னதான் மழைக்காலம் ஜில்லுனு சூப்பரா இருந்தாலும் உங்க தலைமுடி பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும். இந்த மாதிரி நேரத்துல சுற்றி இருக்குற காற்றுல ஈர்ப்பதம் இருந்துட்டே இருப்பதால உங்களது கேசத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு, பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதனால முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி அதிக அளவு முடி உதிர்வு ஏற்படும். இது மட்டும் இல்லாம தலை முடி dry ஆகி கலையிழந்து போய்விடும். 

இதைத்தடுக்க வெயில் காலத்துக்கு எப்படி ஒரு ஹேர் கேர்(Hair Care) ரொட்டீன் ஃபாலோ பண்ணுவீங்களோ அதே மாதிரி மழைக்காலத்துக்கும் ஒரு ரொட்டீன் நீங்க ஃபாலோ பண்ணனும். அதுக்கு என்னேன்ன செய்யனும் என்னென்ன பொருட்கள் உபயோகப்படுத்தலாம் என்று பிரபல முடி மற்றும் அழகு துறை நிபுனர் ஜாவத் ஹபிப் கூறுவதை கீழே பார்க்கலாம். 

தினமும் தலைக்கு குளிங்க: 

மழை நேரத்துல வியர்வையினால் வரும் ஈரப்பதம் காரணமாக ஸ்கால்ப்பில் ஈசியா எண்ணெய்(Oily Hair Care Tips) பிசுபிசுப்பு தன்மை வந்துவிடும். இதனால் ஏற்படும் முடி உதிர்வை தவிர்க்க தினமும் மைல்ட் ஷாம்பு கொண்டு முடியை அலச வேண்டும். சைனஸ் மற்றும் இதர சுவாச கோளாறு பிரச்சனைகள் இருப்பவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். 

முடிக்கு எண்ணெய் வைத்தல்:

இந்த குளிர் நேரத்துல முடி ரொம்ப சுலபமா வறண்டு(Dry Hair Care Tips) போய்விடும். இதனால் தலை முடி Dry ஆகி கலையிழந்து காணப்படும். இதற்கு தலைக்கு குளிப்பதற்கு முன்னாடி தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஏதேனும் ஒன்றை எடுத்து, தாங்க முடியுற அளவுக்கு சூடுபடுத்தி அதை தலைக்கு தேய்க்கனும். ஸ்கால்ப் மட்டும் இல்லாம நுனி முடி வரைக்குமே எண்ணெய் தேய்ப்பது அவசியம். இதை அப்படியே 20 நிமிடங்கள் விட்டுவிட்டு முடியை அலசிவிடலாம். 

முடியை காற்றோட்டமா விடுங்க: 

மழை நேரத்துல முடியை எப்போதுமே இருக்கமா கட்டிவைத்து இருக்கவே கூடாது. Free Hair-ஆ விடுங்க. முடி உள்ளே காற்று போகும்போதுதான் வியர்வை தங்காது. 

ஸ்டைலிங் ப்ராடக்ட்ஸ்-க்கு ‘நோ’ சொல்லுங்க: 

ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, வேக்ஸ் பவுடர் இப்படி எந்த ஒரு ஸ்டைலிங் பொருட்களையும் இந்த காலத்துல உபயோகப்படுத்த வேண்டாம். இந்த ஹெவியான ப்ராடக்ட்ஸ் உங்க ஸ்கால்பில் தங்கி முடி வேர்க்காலில் உள்ள துவாரங்களை அடைத்து, முடியின் வேர்க்கால்களை பலவீனமாக்கி முடி உதிர்வை ஏற்படுத்தும். 

மழையில் நனைய வேண்டாம்: 

நிறைய பேருக்கும் மழையில நனைய ரொம்பவே பிடிக்கும். ஆனால் அது உங்க முடிக்கு எவ்வளவு ஆபத்து தெரியுமா? மழையில் நனைந்த பிறகு உடனடியாக தலைக்கு குளிப்பது அவசியம். இது தேவையில்லா Scalp Infections, ஃபங்கல் பிரச்சனைகள் மற்றும் அரிப்பை தடுக்கும். 

மேலும் படிக்க: மருதாணி சிவக்க சிவக்க.. கை நிறைய மருதாணி கனவில் வருதா?

கற்றாழை ஹேர் பேக்: 

வாரத்திற்கு ஒரு முறைவாது கற்றாழை ஹேர் பேக் உபயோகப்படுத்துவது அவசியம். சுத்தமான கற்றாழை ஜெல்லை எடுத்து ஸ்கால்ப் முதல் நுனி முடி வரை தடவி ஒரு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இதன் பிறகு மைல்ட் ஷாம்பு கொண்டு முடியை அலசவும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow