மோடியும் ராகுல்காந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்.. டெல்லியில் கலகல

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.

Aug 10, 2024 - 10:01
 0
மோடியும் ராகுல்காந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்.. டெல்லியில் கலகல
Modi Rahul gandhi

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் ஒருவருக்கு ஒருவர் புன்னகைத்தபடி, பேசிக்கொண்டிருந்தார்கள். 

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கியது.லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக வென்ற பாஜக அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. பொது பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்தனர். ராகுல் காந்தி பேசும் போது புகைப்படங்களை காட்டி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

அதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சியினரும் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆக்கப்பூர்வமாக அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் நேற்றைய தினம் தேநீர் விருந்து நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துவிட்டு, தங்களுக்கு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் கேமராக்களுக்கு புன்னகைத்தபடி போஸ் கொடுத்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துவிட்டு, தங்களுக்கு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் கேமராக்களுக்கு புன்னகைத்தபடி போஸ் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் இருந்த சோபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா அமர்ந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த நாற்காலியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, சிராக் பாஸ்வான், பியூஷ் கோயல் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுதிப் பந்தோபாத்யாய், கனிமொழி, துரை வைகோ ஆகியோரும் ராகுல் காந்தியுடன் அதே வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துரை வைகோ, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் சந்தித்துப் பேசுவது மரபு. இந்த சந்திபின் போது பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, திமுகவின் சார்பில் கனிமொழி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் நான் கலந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow