படுக்கையை விட்டு எழமுடியாத அளவிற்கு இருந்தேன்..நான் எதிர்கொண்ட விஷயங்கள்..ராபின் உத்தப்பா open talk!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அன்றாடம் அமைதி, தூகம், பசி என அனைத்தையும் இழந்துவிட்டு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிசியான உலகில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை என்றால் அது Stress. இது கண்ணுக்கு தெரியாத பிரச்சனையாக தான் இருந்து வருகிறது. இன்னும் சிலருக்கு இந்த ஸ்டெரெஸ் அதிகமாகி மன அழுத்தம், கவலை என பல மனநல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தனக்கு மன அழுத்தம் இருக்கிறதா, மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசிக்கலாமா, யாரிடமும் இதை பகிர்ந்துக்கொண்டால் கேலி செய்வார்களா என எண்ணியே அந்த மன அழுத்தம் சிலருக்கு அதிகரிக்கும். ஆனால், இப்படியானவர்களுக்கு மருத்துவர்கள் சொல்வது “நீங்கள் இதில் தனியாக இல்லை, உடனிருப்பர்களிடம் உங்கள் பிரச்சனைகள் மனம்விட்டு பேசுங்கள்” எனபது தான். மன அழுத்ததிற்கு பாராபட்சம் இல்லை. பணம், புகழ் என அனைத்தும் இருப்பவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவும் விதிவிலக்கல்ல.
இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தவர் தான் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. இவர் 2007ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அடைந்த வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார் உத்தப்பா. இதனையடுத்து நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் இவர் சிறப்பான திறனை வெளிக்காட்டவில்லை. இதனால் 2011ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இவர் சேர்க்கப்படவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராபின் உத்தப்பா, அவர் மன அழுத்ததில் இருந்ததால் தான் சரியாக விளையாடவில்லை என அப்போதே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்தும் மன அழுத்தம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் உத்தப்பா. அவர், “கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து வீரர் கிரகாம் தோர்பே மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்திகளை நாம் அறிந்துக்கொண்டோம். இதுவரை பல வீரர்கள் மன அழுத்தத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். நானும் அப்படியான ஒரு சூழலில் இருந்திருக்கிறேன். அந்த பயணம் சாதரணமாக அமையவில்லை, மிகவும் கடுமையாக இருந்தது. நம்மை நேசிப்பவர்களுக்கு நாம் ஒரு சுமையாக இருப்பதாக தோண்றும். மதிப்பற்றவனாக நாமே உணரும் நிலைக்கு தள்ளப்படுவோம்.”
மேலும் படிக்க: நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக புதிய வழக்கு.. ரூ.5 கோடி கோரும் நடிகர் வடிவேலு
“இப்படியான மன அழுத்ததை நான் 2011ம் ஆண்டில் உணர்ந்தேன். படுக்கையை விட்டு என்னால் எழுந்திரிக்கக்கூட முடியாது. ஏன் இப்படி ஆகிவிட்டோம் என எனக்கே வெட்கமாக இருக்கும். இந்த மாதிரியான சமயங்களில் உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் போவது பிரச்சனையில்லை. சில நேரங்களில் அந்த ஒரு நாளை கடப்பது மட்டுமே பெரிய விஷயமாக தெரியும். இதிலிருந்து வெளியே வர அனைவரும் மருத்துவரை நாடுவது அவசியம்”, என மனம் திறந்து பேசினார் ராபின் உத்தப்பா.
Warning: உயிரை மாய்த்துக்கொள்வது மனித இனத்துக்கு எதிரான செயல்.
What's Your Reaction?






