குரங்கம்மை வரும் முன் காப்போம்.. என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை அச்சுறுத்தி வருகிறது. குரங்கம்மை நோய் தொற்று வராமல் தடுக்கவும், நோய் பாதிப்பு ஏற்பட்டால் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் பார்க்கலாம். குரங்கம்மைத் தொற்று எப்படி பரவுகிறது? யார் யாருக்கு பரவுகிறது? எப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது .

Sep 3, 2024 - 13:04
Sep 4, 2024 - 10:10
 0
குரங்கம்மை வரும் முன் காப்போம்.. என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?
monkeypox diet foods to help you recover from the virus

கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து குரங்கம்மை நோய் தொற்றினை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. குரங்கம்மை நோய் தொற்று அறிகுறிகள் என்ன? என்ன உணவுகளை சாப்பிட்டால் எளிதில் குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம். 

குரங்கம்மை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய். இந்நோய் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும். ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆய்வகக் குரங்கிலிருந்து முதன் முதலில் இந்த வைரஸ் எடுக்கப்பட்டதால் இதற்கு குரங்கம்மை எனப் பெயர் பெற்றது. குரங்கு மற்றும் பெரியம்மை வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை. இந்த குரங்கு அம்மை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது. காய்ச்சல், சளி, தசை வலி, தலைவலி, முதுகுவலி, சோர்வு போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகளாகும்.  முதலில் அரிப்புகள் ஏற்பட்டு கொப்புளங்களாக மாற்றி பின்னர் வடுக்களாக மாறும். 

காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு பகுதிகளில் வீக்கம், உடல் சோர்வு ஏற்படுதல். சருமத்தில் சிறு கொப்பளங்கள் முகத்தில் தொடங்கி கை கால் உள்ளங்கை, உள்ளங்கால் வரை பரவக்கூடியது. தொண்டைப்புண், இருமல், தசை பிடிப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
கண் வலி, பார்வை மங்குதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். 
இந்நோய் மனிதர்களிடம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. WHOவின் கூற்றுப்படி கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள் போன்றவர்களுக்கு இந்நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ​​நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 

குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட்டில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, குடல் வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோய் வைரஸ் தொற்று என்பதால் வைரஸ் தொற்று சிகிச்சையை இந்த நோய்க்கு தொடங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அறிகுறி உடன் வரக்கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்ற மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதனிடையே குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டவர்கள் என்ன சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சோயா, பாலாடைக்கட்டி, முளைக்கட்டியப் பயிர்கள், வேகவைத்த முட்டை மற்றும் தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். இது நோய் பாதிப்பை விரைவில் கட்டுப்படுத்தும். 

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பப்பாளி மற்றும் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு மற்றும் செர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த பிற உணவுகள் ஆரோக்கியமானவை, ஏனெனில் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். புதினா இலைகள்,பிரியாணி இலைகளில் தயாரித்த கசாயம் சாப்பிடலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow