எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Sep 7, 2024 - 23:35
Sep 7, 2024 - 23:40
 0
எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்
மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

மேலும், இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரேமாதிரி படைத்திருக்க வேண்டும். கோடீஸ்வரன், ஏழை, நல்லவன், கிரிமினல், ஹீரோ, வில்லன் ஏன் இத்தனை மாற்றங்கள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் செய்யும் பாவ, புண்ணியம் தான் இப்போதைய நமது வாழ்க்கை என மாணவர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை இப்படி பேச அனுமதித்தது யார் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில் மஹா விஷ்ணு தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. தற்போது நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். நாளை சென்னைக்கே வருகிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்த மகாவிஷ்ணுவை காவலர்கள் எங்கே வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவில்லை. இந்நிலையில் கைதான மகாவிஷ்ணுவை தேடி அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது சகோதரர் கைது செய்யப்பட்டு எங்கு வைத்திருக்கிறார் என்பதை தேடி அவரது தம்பி விஷ்வா அடையார், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று தேடி வருகிறார். இதனிடையே கைதான மகாவிஷ்ணுவை இன்று இரவுக்குள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப போலீசார் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow