ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sep 7, 2024 - 23:46
Sep 7, 2024 - 23:52
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய அரசியல் கொலைகளில் ஒன்று தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), ராணிப்பேட்டை, காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூரைச் சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய எட்டுபேரை செம்பியம் போலீஸார் கைது செய்திருந்தனர். 

இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மீது எட்டு வழக்குகளும், திருமலை மீது ஏழு வழக்குகளும் பதியப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் பெரம்பூரைச் சேர்ந்த திருமலையும்தான் முக்கியமானவர்கள் எனவும், இவர்கள் இருவருக்கும் சிறையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தனர். மேலும், சிறையில் இருந்தபோது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பாக இருவரும் திட்டம் போட்டிருக்கிறார்கள். சிறையிலிருந்து வெளியில் வந்த திருமலை, ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், திருமலைக்கும் அதே ஊர் தான். அதனால் ஆம்ஸ்ட்ராங், வீட்டின் அருகில் உள்ள பள்ளி பகுதியில் ஆட்டோவை சவாரிக்காக நிறுத்துவதைப் போல நின்று ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணித்து பாலுவிடம் தெரிவித்து வந்திருக்கிறார் எனவும் தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்

இதையடுத்துதான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நேரம் பார்த்து காரியத்தை இந்தக் கும்பல் கச்சிதமாக முடித்ததாகவும், ஆம்ஸ்ட்ராங் வசிக்கும் பகுதியில் வெளிநபர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. அதனால் உணவு டெலிவரி செய்வதைப் போல நடித்து ஆம்ஸ்ட்ராங்கை பிளான் போட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங், பாக்ஸராக இருப்பதால் அவரால்  ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை எளிதில் சமாளிக்க முடியும். அதனால்தான் கொலையாளிகள், ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி அவரின் கணுக்காலில் வெட்டி நிலை குலைய வைத்து கழுத்திலேயே வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் என தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 29 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:  காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில்,  ஆம்ஸ்டாராங் கொலை வழக்கில்  மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் அருள், பொண்ணை பாலு, ராமு, திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், செல்வராஜ் உள்பட உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow