King cobra: ஆத்தாடி.. எத்தாம் பெருசு.. ராஜ நாகத்தை பார்த்து அலறிய அகும்பே மக்கள் - பகீர் வீடியோ!

King Cobra in Karnataka : பாம்பு பிடிப்பவர்களின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களை அச்சுறுத்தும் பதைபதைப்பை ஏற்படுத்தும். ஆபத்தான பாம்புகளைப் அசால்டாக மீட்டு வனத்துறைக்கு விட்டுள்ளனர்.

Jul 20, 2024 - 10:23
Jul 20, 2024 - 10:40
 0
King cobra: ஆத்தாடி.. எத்தாம் பெருசு.. ராஜ நாகத்தை பார்த்து அலறிய அகும்பே மக்கள் - பகீர் வீடியோ!
agumbe king cobra

King Cobra in Karnataka : கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் அகும்பே. பெங்களூருவில் இருந்து 360 கி.மீ. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 350 கி.மீ. சுற்றிலும் மழைக்காடுகள், விதவிதமான மூலிகை மரங்கள் நிறைந்திருக்கும்.அங்கு அனகோண்டா வகை ராஜ நாகங்களும் நிறைந்திருக்கும். அப்படி ஒரு ராஜ நாகம்தான் வனத்தில் இருந்து தப்பி குடியிருப்புக்குள் தஞ்சம் புகுந்தது.

அகும்பே பகுதியில் பெரிய பாம்பு ஒன்று சாலையைக் கடப்பதை அந்தப் பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். அந்தப் பாம்பு, அந்தப் பகுதியிலிருந்த ஒரு வீட்டின் புதரில் உள்ள மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டது. அதனை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக உடனே வனவிலங்கு பாதுகாவல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குக் குழுவினருடன் வந்த அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தின் (ARRS) கள இயக்குநரான அஜய் கிரி, அந்தப் பாம்பை பிடிக்க முயற்சி செய்தார்.

கம்பீரமான அந்த பாம்பு சீறிக்கொண்டே இருந்தது என்றாலும் அச்சப்படாமல் அதன் வாலை பிடித்து கீழே இறக்கி குச்சியை வைத்து பைக்குள் கட்டினார். அதன் பிறகே இந்த ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது தொடர்பான வீடியோவை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நந்தா, “தெற்கு கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகும்பே காட் பகுதியில்  கிங் கோப்ரா மீட்கப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை விவரித்த கிரி, தனது எக்ஸ் பதிவில்,``ஏ.ஆர்.ஆர்.எஸ் குழுவுக்குப் பாம்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அப்போதே உள்ளூர் மக்களுக்கு அங்குப் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அறிவுறுத்திவிட்டு அந்த இடத்திற்கு விரைந்தோம். பாம்பைப் பிடித்த பிறகு, உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம். பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து இணையத்தில் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். பாம்பு பிடிப்பவர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை பாராட்டியுள்ளனர்.அழகான நாகத்தை காப்பாற்றி அதன் வாழ்விடத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்ததற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். என்ன ஒரு கம்பீரமான ராஜ நாகம், நீங்கள் பாம்புகளை மட்டும் காப்பாற்றவில்லை அனைவரையும் காப்பாற்றியுள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow