ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தால்.. அவதூறு பரப்பும் அற்பர்கள்.. வெளுத்து வாங்கும் திருமாவளவன்

VCK Thirumavalavan Speech At Armstrong Memorial Rally : ஆஸ்ட்ராங்கிற்கு வீரவணக்க நிகழ்வோ, நினைவேந்தலோ நடந்தால் அது விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Jul 20, 2024 - 11:11
Jul 21, 2024 - 14:11
 0
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தால்.. அவதூறு பரப்பும் அற்பர்கள்.. வெளுத்து வாங்கும் திருமாவளவன்
VCK Thirumavalavan Speech At Armstrong Memorial Rally

VCK Thirumavalavan Speech At Armstrong Memorial Rally : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.அவரது படுகொலை தமிழ்நாட்டில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, தமாகா என அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது அரசியலா? பழிக்குப் பழி வாங்கவா? ஆதாய கொலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ப.ரஞ்சித் கொந்தளிப்பு:

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் இயக்குநர் ப.ரஞ்சித் திமுக அரசுக்கு எதிராக காட்டமாக பதிவிட்டிருந்தார்.  பெரம்பூரில்  ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்:

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குநர் ப.ரஞ்சித் அறிவித்திருந்தார்.சில தினங்களுக்கு வள்ளியம்மா பேராண்டி ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் திமுகவுக்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்று தான் வாக்களித்தேன். ஆனால் திமுக, அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை மீண்டும் நீடித்தால் திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன். இது ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

தொல். திருமாவளவன்:

இந்தநிலையில், 'ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கூலி வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உலவுகிற சில அற்பர்கள்,ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அவதூறு பரப்புவதா?

விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்து, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்,
யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரும் வந்து நம்மை அழைக்கலாம்,இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

திருமுகவிற்கு எதிர்ப்பு மனநிலை:

அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள்.அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.
எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை. நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள்.இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. 

யாருடனும் இணைய வேண்டாம்:

நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தணித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம் போராட்டங்களை நடத்தலாம்.இதனை நான் ஒரு வேண்டு கோளாக உங்களுக்கு வைக்க கடமைப் பட்டுள்ளேன்.இது நம்முடைய கட்சியின் தணித்துவத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இந்த கருத்தை நான் முன்வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow