தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலைகள்.. பட்டியல் போட்ட எடப்பாடி பழனிச்சாமி

Edappadi Palaniswamy : மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டசரபை எதிர்கட்சித்தலைருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Jul 19, 2024 - 10:30
Jul 20, 2024 - 10:20
 0
தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலைகள்.. பட்டியல் போட்ட எடப்பாடி பழனிச்சாமி
Edappadi Palanisamy

Edappadi Palaniswamy : தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 15 நாட்கள் முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் கட்சி பேதமின்றி அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியளித்து வருகின்றன. இதனிடையே இந்த கொலை சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி" என்று பாடினார் புரட்சித் தலைவர். 'புரட்சித்தலைவரின் ரசிகன் நான் என்றும், அவரது படங்களை பார்த்தே வளர்ந்தவன் நான்' என்றும் தேவைக்கேற்றார்போல், சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. 
மு.க ஸ்டாலின் , தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.

விடியா திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும்; பிப்ரவரி மாதம் 64 கொலைகளும்; மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும்; மே மாதம் 130 கொலைகளும்; ஜூன் மாதம் 104 கொலைகளும்; ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.

கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால், 'அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்' என்பதை நினைவூட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow