Hardik Pandya: மனைவியை பிரிந்த ஹர்திக் பாண்டியா... முடிவுக்கு வந்த காதல் கதை... மகனுக்காக மட்டும்?
Hardik Pandya Divorce : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே இதுகுறித்து தகவல்கள் பரவி நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவே இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Hardik Pandya Divorce: இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக மிரட்டி வருகிறார் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங் என ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஃபைனலில், கடைசி ஓவரை வீசி இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இந்நிலையில், அவர் தனது மனைவி நடாஷாவை பிரிவதாக அறிவித்துள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில், 4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னர், நானும் நடாஷாவும் பிரிந்துவிடுவது என பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் இருப்பதற்காக முயற்சிகள் எடுத்தோம். ஆனால், இறுதியாக இருவரும் பிரிவதே சிறந்த முடிவு என்ற புரிதலை கொடுத்துள்ளது. இது கடினமான முடிவாக இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் எங்களிடையே இருந்த மகிழ்ச்சி, மரியாதை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகன் அகஸ்தியாவால் இருவருமே ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்ந்தோம். எங்கள் வாழ்க்கையில் அகஸ்தியா எப்போதுமே முக்கியமான அங்கமாக இருப்பார். அதனால் பெற்றோராக நாங்கள் இருவரும் இணைந்தே அகஸ்தியா மீது அக்கறை எடுத்துக்கொள்வோம். எனவே தனிப்பட்ட முறையில் நாங்கள் எடுத்துள்ள இந்த கடினமான முடிவை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின்(Hardik Pandya) இந்த இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவரும் 2018ம் ஆண்டு முதன்முறையாக சந்தித்துக்கொண்டனர்.
செர்பிய மாடல் அழகியான(Natasa Stankovic) நடாஷாவுடன் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பார்ட்டிகளுக்கு சென்று வந்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து இருவரும் 2020ம் ஆண்டு நடக்கடலில் படகில் பயணித்தபடி மோதிரம் மாற்றி தங்களது காதலை அறிவித்தனர். இதுவே அவர்களது நிச்சயதார்த்தமாகவும் மாறியது. அதன்பின்னர் கொரோனா பரவலின் போது ஹர்திக்கும் நடாஷாவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 2020ம் ஆண்டு அவர்களுக்கு அகஸ்தியாவும் பிறக்க, இருவருமே மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றனர்.
அதன்பின், 2023ம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவரும் மீண்டும் ஒருமுறை பிரமமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். அதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவருமே தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?