இசையமைப்பாளர் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா.. மகள் படத்தில் அப்பா பாடாதது ஏன்?

Music Director Khatija Rahman : ஹலீதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான்.

Jul 24, 2024 - 13:42
Jul 24, 2024 - 14:18
 0
இசையமைப்பாளர் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா.. மகள் படத்தில் அப்பா பாடாதது ஏன்?
Music Director Khatija Rahman at Minmini Movie Event

Music Director Khatija Rahman at Minmini Movie Event : படம் குறித்தும், தனது பணி குறித்தும் கதீஜா பேசுகையில், “ஹலீதா முதலில் என்னை அணுகியபோது இசையமைப்பாளர் ஆக வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் கணவர் மற்றும் படக்குழுவினர் ரொம்ப சப்போர்ட் செய்தனர். இந்த படத்தில் நாலு பாடல்கள், நானே ஒரு பாடல் பாடி இருக்கிறேன்" என்றார்.

இசையமைப்பாளர் ஆனது குறித்து அப்பா ஏ.ஆர்.ரஹ்மான்(AR Rahman) என்ன சொன்னார் என்று கேட்டால், “தாத்தா சேகர், அப்பா ரஹ்மான், அத்தைகள் ரெஹைனா, இஷ்ரத், cousin ஜி.வி.பிரகாஷ், எ.எச்.காஷிப் ஆகியோரை தொடர்ந்து எங்கள் குடும்பத்தில் இருந்து நான் இசையமைப்பாளர் ஆகி இருக்கிறேன். அவரிடம் பாடல்களை காண்பித்தேன். அவர் வாழ்த்தினார். என் வாழ் நாள் முழுக்க அப்பாவுடன், அவர் பாடல்களுடன் ஒப்பிடுவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் என் தனித்தன்மையுடன் ஜெயிக்க விரும்புகிறேன்” என்றார்.

அப்பாவை ஏன் பாட வைக்கவில்லை என்றால், “அவர் மற்ற இசையமைப்பாளர்களிடம் பாடுவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அது மகளாக இருந்தாலும் சரி. அவரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் இசையமைப்பாளர் ஆனதுக்கு ஜி.வி.பிரகாஷ்(GV Prakash) உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். என் தம்பி, கணவர் உட்பட பலர் விழாவுக்கு வந்து வாழ்த்தினர். அம்மாவுக்கும் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

உங்களுக்கு எந்த ஜானர் பிடிக்கும்? யார் படத்தில் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்றால், படத்தின் கதை, ஜானருக்கு ஏற்ப பணியாற்றுவேன்.. எனக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். அடுத்து ஒரு படத்துக்கும் இசையமைத்து வருகிறேன். விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்றார்

அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் இரவில் இசையமைப்பார். உங்க பாலிசி என்ன என்று கேட்டால் இந்த பட இயக்குனர் ஹலீதா சீக்கிரம் தூங்கி விடுவார். அதனால் பகலில்தான் இசைப்பணி செய்தோம் என சிரிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow