Tamil Movie Review : இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ். வெற்றி யாருக்கு? தேறியது எது? மினி விமர்சனம்

Tamil Movie Review : சிம்புதேவனின் போட், விஜய்ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன், நட்பை கொண்டாடும் நண்பன் ஒருவன் வந்தபிறகு, தெருக்கூத்து பின்னணியில் ஜமா, திரில்லர் படமான பேச்சி, நகுல் நடித்த வாஸ்கோடகாமா என 6 படங்கள் இந்த வாரம் ரிலீஸ். இதில் எந்த படம் டாப், எது சுமார்?

Aug 2, 2024 - 19:47
Aug 3, 2024 - 11:35
 0
Tamil Movie Review : இந்த வாரம் 6  படங்கள் ரிலீஸ்.  வெற்றி யாருக்கு?  தேறியது எது? மினி விமர்சனம்
இந்த வார ரிலீஸ் படங்கள்

Tamil Movie Review : இந்த வாரம் ஆகஸ்ட், 2, 2024ல் ‘போட்’, ‘மழைபிடிக்காதமனிதன்’, ‘பேச்சி’, ‘ நண்பன்ஒருவன்வந்தபிறகு’, ‘ஜமா’, ‘வாஸ்கோடகாமா’ ஆகிய  6 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் கதை என்ன? படம் எப்படி இருக்குது? இதோ மினி விமர்சனம்

போட். (ரேட்டிங் 2.5./5)

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு கதைநாயனாக நடித்திருக்கும் படம். 1943ம் ஆண்டு காலகட்டத்தில் கதை நடக்கிறது. ஜெர்மன் விமானங்களின் குண்டு வீச்சுக்கு பயந்து, யோகிபாபுவுக்கு சொந்தமான படகில் கடலுக்குள் தப்பி செல்கிறது ஒரு கூட்டம். நடுக்கடலில் 10 பேர் தத்தளிக்க, அதிக எடை காரணமாக போட் உடையும் நிலை. அப்போது போட்டை சுறாவும் சுற்றி  வர, புயலும் மிரட்ட என்ன நடக்கிறது. யார் தப்பித்தார்கள் என்பது கதை. 1943 காலகட்டம், 10 பேரின் மாறுபட்ட குணம், அவர்களின் மனநிலை, குறிப்பாக, ஒரு போட்டில் 95% சதவீத கதை நடப்பது, திருப்பங்கள் ஆகியவை புதுசு. ஆனால், சிம்புதேவன் இயக்கிய படம், யோகிபாபு நடித்த படம், காமெடி துாக்கலாக இருக்கும் என்று நினைத்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். உயிருக்கு போராடும் கதை என்பதால், சீரியசாக சீன்கள் நகர்கின்றன. யோகிபாபு, கொலப்புளி லீலா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், மதுமிதா, கவுரிகிஷன் என தெரிந்த முகங்கள் பலர் இருந்தாலும், யாரும் பெரிதாக ஈர்க்கவில்லை. டிராமாதனமும், பேசிக்கொண்டே இருப்பதும் மைனஸ். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு மட்டும் கவர்கிறது. விவாதம், சண்டை, கருத்து பேசுவது என கதை நகர்வது போராடிக்கிறது. சிம்புதேவனின் போட் தத்தளிக்கிறது


மழை பிடிக்காத மனிதன்(ரேட்டிங் 2.5/5)

விஜய்மில்டன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி, மேகாஆகாஷ், டாலி தனஞ்செயா, பிருத்வி நடிப்பில் உருவான படம். இந்திய ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்த விஜய்ஆண்டனியை, அந்தமானில் தனியாக விட்டுவிட்டு ‘அமைதியாக’ இருக்கணும்னு அட்வைஸ் செய்கிறார் இன்னொரு அதிகாரியான சரத்குமார். அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால், சூழ்நிலையில், வில்லன்களின் அடாவடி காரணமாக மீண்டும் ஆக் ஷனுக்கு இறங்குகிறார் விஜய்ஆண்டனி. என்ன பிரச்னைகள் வருகிறது என்பது கதை. அந்தமான் அழகு, ஒளிப்பதிவு (இயக்குனரேஒளிப்பதிவாளர்) , ஆக் ஷன் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்றபடி, கதை சொல்லப்பட்ட விதம்  குழப்புகிறது. காமெடி, காதல் இருந்தும் பெரிதாக ஒட்டவில்லை. பாடல்கள் செட்டாகவில்லை. கிளைமாக்ஸ் பக்கா சினிமாத்தனம். சத்யராஜ், சரத்குமார் இருந்தும் பலனில்லை. மழை பிடிக்காத மனிதனில் பிடிக்காத சீன்களே அதிகம்


பேச்சி( ரேட்டிங் 3.5/5)

காயத்ரி, தேவ்ராம்நாத்  உள்ளிட்ட 5 நண்பர்கள், ஒரு அடர்ந்த காட்டுக்குள் அட்வெ ன்சர் அனுபவிக்க  பயணம்  செ ய்கிறார்கள். அந்த ஏரியாவாசியான பால.சரவணன் அவர்களுக்கு கைடு. அப்போது அங்கே அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. சிலர் கொல்லப்படுகிறார்கள். என்ன நடக்கிறது என்று பாலசரவணனிடம் டூர் வந்தவர்கள் கே ட்க, பே ச்சி என்ற சூன்யகார கிழவி  பற்றி விவரிக்கிறார்.  உயிர் பலிக்காக அவள் அலைவதை சொல்கிறார். நீங்க செ ய்த தவறால் அவள் மீண்டும் பலம் பெ ற்று வந்துவிட்டாள், நம்மை  கொல்ல துரத்துகிறார் என்கிறார். இது உண்மையா? பே ச்சி யார்? அவள் பிடியில் இருந்து அனைவரும் தப்பித்தார்களா என்பது கரு. கதைக்களம், நடிகர்கள், அமானுஷ்ய விஷயங்கள், சவுண்ட் எபக்ட்ஸ், துரத்தல், மிரட்டல் போன்றவை ரசிக்க வைக்கிறது. புதுமுகங்கள் நடித்தாலும் தொய்வு இல்லாமல் பரபரப்பாக கதை நகர்கிறது.பார்த்திபன் ஒளிப்பதிவும், ராஜேஷ் இசையும், ராமச்சந்திரன் இயக்கமும், காடு பி்ன்னணியிலான காட்சியமைப்பும் நல்ல படத்தை தந்து இருக்கிறது. திரில்லர் கதை விரும்பிகளுக்கு பேச்சி நல்ல விருந்து

ஜமா( ரேட்டிங் 4/5)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தெருக்கூத்து குழுவில் பெண் வேடமிட்டு ஆடும் ஹீரோ பாரி இளவழகனுக்கும், அந்த குழு தலைவர், வாத்தியாரான சேத்தனுக்கும் இடையே மனஸ்தாபம் வருகிறது. சேத்தன் மகள் அம்முஅபிராமி ஹீரோவை காதலிக்க, பிரச்னை பெ ரிதாகிறது. தெருக்கூத்து குழுவைதான் ஜமா என்கிறார்கள். இந்த ஜமாவில் நான் அர்ஜூன் வேஷம் போடுவேன், அந்த குழுவுக்கு தலைவர் ஆவேன் என்று சபதம் செ ய்கிறார் ஹீரோ. அது நடந்ததா என்பது கதை. தெருக்கூத்து பின்னணியில் அவ்வளவு அழகாக, அழுத்தமான கதையாக உருவாகி உள்ளது ஜமா. ஹீரோ பெண் வேடம் கட்டும் ஆடுகிற சீன், அவமானத்தால் குமுறுகிற சீன், இடை வேளைக்குபின் வீறு கொண்ட எழுகிற சீன் செம. ஹீரோவாக நடித்த பாரிஇளவழகன், ஜமா தலைவராக வரும் சேத்தன் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். பல விருதுகள் பெறுவது நிச்சயம். ஹீரோயின் அம்மு அபிராமி, அம்மாவாக வரும் மணிமேகலை, ஜமா உறுப்பினர்கள் என அனைவரும் மனதில் நிற்கிறார்கள். கோபால்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அந்த கிராமத்துக்கு சென்று வந்த உணர்வை  தருகிறது.  இ ளையராஜாவின் இசை, படத்துக்கு பலம். தெருக்கூத்து, கலைஞர்கள், அவர்களின் எமோஷனல் பின்னணியில் ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி. ‘தெருக்கூத்து, உணர்வுகளின் கலவையாக விரியும் ஜமா சிறந்த படைப்பு என்ற பாராட்டை பெறுகிறது*

நண்பன் ஒருவன் வந்தபிறகு( ரேட்டிங் 3.5/5)

தலைப்புக்கு  ஏற்ப நட்பை கொண்டாடுகிற நண்பர்களின் கதை. ஒரே ஏரியா, ஒரு பள்ளி, கல்லுாரி என வளரும் ஹீரோ அனந்த் அன் பிரண்ட்ஸ் டீம், கல்லுாரி படிப்பை முடித்தவுடன் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க ஆசைப்படுகிறது. சில சிக்கல் காரணமாக அந்த திட்டம் டிராப் ஆகி, நட்பு உடைகிறது. சிங்கப்பூருக்கு செ ன்ற ஹீரோ செ ன்னை திரும்பினார்களா? நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது படத்தின் கதை. நட்பை கொண்டாடும் அனைவருக்கும் பிடிக்கும்படியான சீன்கள், கலாட்டா, சண்டை ரசிக்க வைக்கிறது. ஹீரோ அனந்த் ,பவானிஸ்ரீ காதல், ஊடல் நச். சிங்கப்பூர் போர்ஷன் கொஞ்சம் இழுத்தாலும், கிளைமாக்ஸ் அருமை. என்ஜினியரிங் கல்லுாரி  கலாட்டா, மாயா டீச்சர், யூத், கல்லுாரிமாணவர்கள், நண்பர்களை கொண்டாடும்வகையிலான  கலகல கதை, நண்பர்களாக நடித்தவர்களின் நடிப்பு, ஏ.எச்.காஷிப் இசை, பழைய பாடல்கள், எமோஷனல் சீன்கள் படத்தை எனர்ஜியாக வைத்து இருக்கிறது. அனந்த நடிப்பு, இயக்கம் ரசிக்க வைக்கிறது. அட, இப்படிப்பட்ட நண்பர்கள் நமக்கு இல்லையே, அட இருந்தாங்களே என்ற பீலிங்கை படம் தருகிறது

வாஸ்கோடகாமா(ரேட்டிங்  2/5)

புதுமுகம் ஆர்ஜிகே இயக்கத்தில் நகுல், அர்த்தனா, கே.எஸ்.ரவிக்குமார், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் உட்பட பலர் நடித்த படம். நல்லவராக இருந்தால் மதிக்கமாட்டோம். கெ ட்டவர்களுக்கு, ஏமாற்றுபவர்களுக்குதான் பெண் கொடுப்பது என்ற கொ ள்கையில் இருக்கும் ஆனந்த்ராஜ் மகள் அர்த்தனை காதலிக்கிறார் நகுல். ஆனா அவரோ நல்லவர். அந்த காதல் கை கூடியதா?  ஜெ யிலில் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரை கொலை செய்ய முயற்கிறது ஒரு கும்பல். அது ஏன், நகுல் அதை தடுத்தாரா என்பது மீதி கதை. ரொம்பவே வித்தியாசமாக படமெடுக்கிறோம். புதுசாக எதையோ சொல்ல நினைக்கிறோம் என்று யோசித்த இயக்குனர், கதையில் அதை சரியாக காண்பிக்கவில்லை. பெரும்பாலான சீன்கள் குழப்பம். காதல், ஆக் ஷன், செ ன்டிமென்ட், பெரிய நடிகர்கள் இருந்தாலும் எதுவும் செட்டாகவில்லை. வித்தியாசம், காமெடி என்ற பெய ரில் மனதில் பட்டத்தையெல்லாம் எடுத்திருக்கிறார் இயக்குகிறார். வாஸ்கோடகாமா என்பது ஜெயிலின் பெ யர். இஷ்டப்பட்டதை எடுத்து நம்மை கஷ்டப்படுத்துகிறார் இயக்குனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow