கார்கில் விஜய் திவாஸ்..வெற்றித்திருநாளின் வெள்ளி விழா.. உயிர்நீத்த வீரர்களுக்கு மோடி அஞ்சலி

PM Modi Tribute To Soldiers in 25th Kargil Vijay Diwas 2024 : 1999ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து, கார்கில் மூவர்ணக்கொடியை பறக்க விட்ட வெற்றி வரலாறு கார்கில் விஜய் திவாஸ் ஆக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

Jul 26, 2024 - 10:08
Jul 26, 2024 - 10:30
 0
கார்கில் விஜய் திவாஸ்..வெற்றித்திருநாளின் வெள்ளி விழா.. உயிர்நீத்த வீரர்களுக்கு மோடி அஞ்சலி
PM Modi Tribute To Soldiers in 25th Kargil Vijay Diwas 2024

PM Modi Tribute To Soldiers in 25th Kargil Vijay Diwas 2024 : கார்கில் போரில் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் வெள்ளி விழா ஆண்டு இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கார்கில் திராஸில் போர் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.  கார்கில் திராஸ் எல்லைப் பகுதியில் தேசம் காக்கும் வீரர்களுடன் கலந்துரையாடி இனிப்புகளை வழங்கினார் பிரதமர் மோடி வழங்குகிறார்.

கடல் மட்டத்தில் இருந்து, கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது கார்கில். இந்தியா - பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கார்கில் மாவட்டத்தின் வழியே செல்கிறது.  கடுங்கோடை காலத்தில் கூட, இங்கு, கொடும் குளிர் வாட்டும் பகுதிதான் கார்கில். 1999 ஆம் ஆண்டின், மே 3 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவின.

கிளர்ச்சியாளர்களுடன் கரம் கோர்த்து, பாகிஸ்தான் ராணுவமும் எல்லை தாண்டியது. 1999ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி இந்த கூட்டுப்படை இந்தியப் படையின் மீது தாக்குதலைத் தொடங்கியது. பாகிஸ்தானின் அப்போதயை ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப்பின் கண்காணிப்பில்  இந்த அத்துமீறல் அரங்கேறியது.

அத்துமீறலை அனுமதிக்காத இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.  எங்களது கார்கிலை இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது என்று பாகிஸ்தான் பொய் சொன்னது. எங்கள் சொந்த மண் கார்கில் என உரிமையை விட்டுத்தராமல் போராடியது. ஆபரேஷன் விஜய் என்ற திட்டத்துடன் களமிறங்கியது இந்திய ராணுவம்.
'விஜய்' என்றால் வெற்றி. நிச்சய வெற்றிக்காக 'ஆபரேஷன் விஜய்' செயல்திட்டத்துடன் தீரத்துடன் போராடினர் நமது வீரர்கள். 

கார்கிலில் மே மாதம் மூண்ட போர், இரவு பகலாக தொடர்ந்தது 3 மாதங்களுக்கு நீடித்தது. 'விஜய்' என்றால் வெற்றி. நிச்சய வெற்றிக்காக 'ஆபரேஷன் விஜய்' செயல்திட்டத்துடன் சூளுரைத்தது போலவே வெற்றியை வசப்படுத்தியது இந்தியப் படை. பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முனைந்த கார்கில் மண்ணில் ஜூலை 26ஆம் தேதி இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர் நம் ராணுவ வீரர்கள்.இந்த வெற்றித்திருநாள் ஆண்டுதோறும் கார்கில் விஜய் திவாஸ் ஆக கொண்டாடப்படுகிறது. கார்கில் வெற்றிக்காக, இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு குழுவும், தங்கள் தீரத்தை வெளிப்படுத்தியது.

இந்த ஆண்டு வெள்ளி விழாவை நாம் பெருமையுடனும் இறுமாப்புடனும் கொண்டாடுகிறோம். இந்த வெற்றி அத்தனை எளிதில் கிடைத்திடவில்லை. இதற்காக, 527 வீரர்களின் உயிர்களை இழந்திருக்கிறோம். தேசம் காக்க 527 வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், 1500 வீரர்கள் படுகாயமடைந்தனர். கார்கில் போர் வெற்றி தினவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று லடாக் சென்றுள்ளார்.கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் வீரவணக்கம் செலுத்தினார். 

கார்கில் செல்லும் முன்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இன்றைய நாள் ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் சிறப்பான நாள். தேசத்தை காக்கும் அனைவருக்கும் வாழ்த்தும், உயிர்நீத்தவர்களுக்கு எனது இரங்கலும் தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.கார்கில் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow