Kannappar Thidal House Issue : சேகர்பாபு போலி வாக்குறுதி கொடுத்தாரா? கண்ணப்பர் திடல் மக்கள் கொந்தளிப்பு - சிபிஐஎம் கட்சி போராட்டம்

Kannappar Thidal House Issue : வீடு ஒதுக்கீடு பெறச்சென்ற மக்களிடம் பயனாளர் தொகையை தற்போது கேட்பதால் மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் கண்ணப்பர் திடல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Aug 31, 2024 - 17:22
Sep 1, 2024 - 10:08
 0
Kannappar Thidal House Issue : சேகர்பாபு போலி வாக்குறுதி கொடுத்தாரா? கண்ணப்பர் திடல் மக்கள் கொந்தளிப்பு - சிபிஐஎம் கட்சி போராட்டம்
kannapar thidal house issue

Kannappar Thidal House Issue : சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு வழங்க மாநகராட்சி முன்வந்து, 114 குடும்பங்களை அடையாளம் கண்டு, பயோமெட்ரிக் பதிவு செய்தது. மூலக்கொத்தளம் பகுதியில் வீடு வழங்குவதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உறுதியளித்தது.

ஆனால் தற்போது, பயனாளி கட்டண தொகை ரூ.4.75 லட்சம் செலுத்தினால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வாரியம் தெரிவித்தது. இதை எதிர்த்து பயனாளிகள் குடும்பத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நேரில் சந்தித்து, இவர்களுக்கு பயனாளி கட்டண தொகை கேட்காமல் வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.அதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு பயனாளி கட்டணத் தொகை வசூலிக்காமல் வீடு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். ஒரு வாரத்தில் கட்டணம் வசூலிக்காமல் வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் ஆணையர் குமரகுருபரன் உறுதியளித்தார். 

சென்னை கண்ணப்பர் திடலில் குடிவைக்கப்பட்ட மக்களின் வாழ்விட உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அம்மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு உறுதி அளித்துள்ளாபக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா அறிக்கை வெளியிட்டார். 

அதில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி ரிப்பன் மாளிகை அருகில் தெருவோரத்தில் வசித்து வந்த மக்க ளை, மூன்று மாதத்தில் குடியிருப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி அடிப்படையில் கண்ணப்பர் திடல் அருகில் உள்ள வீடற்றோர் காப்பக கட்டிடத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தங்க வைத்தனர். தற்போது அக்கட்டி டத்தில் அரசாங்கக் கணக்குபடி 115 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மனிதர்கள் வாழ்வதற்கு தகுதி யற்ற கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்ட  மக்கள், அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி குடியிருப்பு ஒதுக்கக் கோரி மனுக்கள் மேல் மனுக்கள் கொடுத்து போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, அம்மக்களுக்கு மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 114 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.ஆனால், இந்த குடியிருப்பில் குடி யேற ஒவ்வொரு குடும்பமும் நான்கரை  லட்சம் பணத்தை, பயனாளித் தொகை யாக கட்டச் சொல்லி பெருநகர சென்னை மாநகராட்சி கூறியது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி பயனாளிக் கட்டணம் செலுத்த இயலாது என்கிற கோரிக்கையை முன்வைத்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 23  அன்று பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையரை நேரடியாக சந்தித்து பயனாளித் தொகை செலுத்தாமல் வீடு கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணை யரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தார். 

ஆகஸ்ட் 28 அன்று மாநகராட்சி மண்டலம் 5, அதிகாரிகள் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் மக்களையும் அழைத்துப் பேசினர். “நான்கரை லட்சம் வேண்டாம், ஒன்ற ரை லட்சம் கட்டினால் இரண்டு நாளில்  வீடு கொடுப்போம்” என்றார்கள். பயனாளித் தொகை ஒரு ரூபாய் வாங்காமல் வீடு கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை,  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “பயனாளித் தொகையே இல்லாமல் வீடுகளை ஒதுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 22 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட திட்டமே இல்லை. எனவே, பயனாளித் தொகை இல்லாமல் வீடுகளை ஒதுக்கீடு செய்வ தற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவை தொலைபேசியில் அழைத்து, “கண்ணப்பர் திடலில் குடியிருக்கும் மக்களுக்கான பயனாளிகள் கட்டணத்தை அரசாங்கமும் மாநகராட்சியும் ஏற்றுக்கொள்ளும். பயனாளித் தொகை பெறாமல் குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில், மாநகராட்சி தரப்பில் இருந்து பயனாளிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக மக்களிடம் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு கண்ணப்பர் திடல் மக்கள் நன்றி தெரிவித்தனர். 

கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு குடும்பத்தினரும் பல்வேறு துயரத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி, உயிரிழப்புகளை சந்தித்து  சென்னை நகரத்தில் வீடு கேட்டு, விடாப்பிடியாக போராடிய கண்ணப்பர் திடல் மக்கள் இன்றைய தினம் வீடு ஒதுக்கீடு பெறச்சென்றபோது அந்த பகுதி மக்களிடம் பயனாளர் தொகையை தற்போது கேட்பதாக புகார் எழுந்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் போலி வாக்குறுதி அளித்தாரா என்று மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் கண்ணப்பர் திடல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow