Kamika Ekadashi 2024 : காமிகா ஏகாதசி விரதம்.. பெருமாளை வணங்கினால் பித்ரு தோஷம் நீங்கும்.. ஏழு தலைமுறை பாவம் போகும்

Kamika Ekadashi 2024 Viratham Benefits in Tamil : ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. புதன்கிழமையான இன்றைய தினம் ஏகாதசி வருவது சிறப்பு. இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளை வணங்கினால் காரியங்கள் நடைபெறும்.

Jul 31, 2024 - 13:05
Jul 31, 2024 - 14:13
 0
Kamika Ekadashi 2024 : காமிகா ஏகாதசி விரதம்.. பெருமாளை வணங்கினால் பித்ரு தோஷம் நீங்கும்.. ஏழு தலைமுறை பாவம் போகும்
Kamika Ekadashi 2024 Viratham Benefits in Tamil

Kamika Ekadashi 2024 Viratham Benefits in Tamil:  ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.ஏகாதசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த விரதத்தின் முலம் விஷ்ணுவின் அருள் கிடைப்பதோடு அதன் முலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.

இன்றைய தினம் காமிகா ஏகாதசி விரதம்(Kamika Ekadashi Viratham) கடைப்பிடிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியமானது பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தைவிடவும் பலமடங்கு புண்ணியத்தை கொடுக்கும். மற்ற ஏகாதசிகளைவிட மிகுந்த பலன்களை காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பெறமுடியும்.

காமிகா ஏகாதசியைத்(Kamika Ekadashi) தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள், தாமரை இலையைத் தண்ணீர் எப்படித் தீண்டுவதில்லையோ அப்படி, பாவம் ஒருபோதும் அவர்களைத் தீண்டுவதில்லை. காமிகா ஏகாதசி நாளில் துளசி இலைகொண்டு பகவான் விஷ்ணுவை வழிபட உடல் தூய்மையும் மனத்தூய்மையும் கிடைக்கும். 

உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண அர்ப்பணிப்போடு காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும், பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆடிமாத காமிகா ஏகாதசி(Kamika Ekadashi Viratham in Tamil) விரதத்தை அனுசரிப்பவர்கள், வாஜ்பேய யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இந்த நாளில் தன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் திருவுருவத்தை வழிபட வேண்டும். அவ்வாறு வணங்க, கங்கையில் நீராடி காசி, நைமிசாரண்யம், புஸ்கர் ஆகிய புண்ணியத் தலங்களில் தங்கும் பலன்களைப் பெறுவர்.

காமிக ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு எம பயம் அல்லது மரண பயம் உண்டாகாது. மறுபிறவி இல்லா முக்தி நிலையும் கிடைக்க பெறுகிறார்கள். பித்ரு தோஷங்கள் நீங்குகிறது. செல்வ வளம் மிக்க வாழ்க்கைக்கும், நோய்கள் பிடிக்காத உடல் மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க இந்த காமிக ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது அவசியம் என சான்றோர்கள் அறிவுறுத்துகின்றனர். 

தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த ஆடி தேய்பிறை ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் அன்றைய தினம் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வதால் விரதம் இருந்த பலன்களை பெறலாம் என கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow