Suresh Kamatchi : 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் வருவேன் - அடம் பிடித்த அபர்ணதி
Producer Suresh Kamatchi Warning Aparnathy : நடிகை அபர்ணதி ரூ 3 லட்சம் கொடுத்தால்தான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவேன் என்று அடம்பிடித்ததும். அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பதிலடி கொடுத்ததும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Producer Suresh Kamatchi Warning Aparnathy : மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி அடுத்து வெளியிடும் படம் நாற்கரப்போர். ஸ்ரீவெற்றி தயாரிக்க, லிங்கேஷ், அபர்ணதி, அஸ்வின், சுரேஷ்மேனன் நடிக்கிறார்கள். குப்பை அள்ளும் சமூகத்தில் பிறந்த ஒருவன் எப்படி சதுரங்க விளையாட்டில் முன்னேறி கிராண்ட் மாஸ்டர் ஆகிறார் என்பது கதை. சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஜெயில் மற்றும் தேன் படங்களில் நடித்த அபர்ணதி இதில் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், அவரை மேடையில் காரசாரமாக விமர்சித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
அவர் பேசுகையில் ‘‘சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். பல தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெறுகிறார்கள். உண்மையில் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு. விட்டதை விட்ட இடத்தில் தான் பிடிக்க வேண்டும். எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும். இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதில் நடித்த அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை. அதில் எங்களுக்கு வருத்தம். ஹீரோயின்கள் பட புரமோசனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாபக்கேடாகவே மாறிவிட்டது.
அபர்ணதியை இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். எங்களுக்கு அது புதிதாக இருக்கிறது. நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்றார். அது மட்டுமல்ல, மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்றெ ல்லாம் நிபந்தனை விதித்தார். அதை வெ ளிப்படையாக சொன்னால் சர்ச்சையாக மாறிவிடும். நாங்கள் பணம் கொடுக்கவில்லை.
பின்னர் 2 நாட்கள் கழித்து அவரே போன் செய்து, ஸாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார் ஆனால் இன்று வரவில்லை. அது குறித்து விசாரித்தால் அவர் அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள். இந்த படத்திற்கு தொடர்பே இல்லாத நடிகைகள் கோமல் சர்மா, நமீதா ஆகியோரே முன்வந்து கலந்து கொண்டிருக்கும்போது படத்தில் நடித்த நடிகைக்கு இதில் கலந்து கொள்வதில் என்ன சிரமம் ? என்று பொங்கினார்.
சில தினங்களுக்கு முன்பு நடந்த எமக்கு தொழில் ரொமான்ஸ் பட விழாவுக்கு ஹீரோ அசோக்செல்வன் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது குறித்து மேடையில் பொங்கினார் தயாரிப்பாளர் திருமலை. தயாரிப்பாளர் கே.ராஜனும் அசோக்செல்வன் மீது பாய்ந்தார். அடுத்து நடந்த போட் பட பிரமோசனுக்கு 3 மணி நே ரம் லே ட்டாக வந்து பெ ரிதாக பே சாமல் வெ ளியேறினார் அதில் கதைநாயனாக நடித்த யோகிபாபு. இப்படி தமிழ்சினிமாவில் நடிகர், நடிகைகள் தொ டர்ச்சியாக புர மோசன் நிகழ்ச்சியை புறக்கணிப்பது சர்ச்சை ஆகி வருகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் பட பிரமோஷனில் கலந்துகொள்ளாத நடிகர், நடிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
What's Your Reaction?