எம்ஜிஆரின் அடிமைப்பெண் செட் பார்த்து வியந்தேன்... இந்தியன்2 பிரஸ்மீட்டில் கமல்ஹாசன் பிளாஷ்பேக்

அந்த காலத்தில் சத்யா ஸ்டூடியோவில் எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்துக்காக ஜெய்ப்பூர் அரண்மனையை செட் போட்டார்கள். அதை பார்த்து, இப்படியெல்லாம் நம்ம படத்துக்கு அமையுமானு ஆசைப்பட்டேன். இந்தியன் 2வில் அதைவிட பிரமாண்ட செட் இருந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Jul 6, 2024 - 16:51
Jul 6, 2024 - 18:19
 0
எம்ஜிஆரின் அடிமைப்பெண் செட் பார்த்து வியந்தேன்... இந்தியன்2 பிரஸ்மீட்டில் கமல்ஹாசன் பிளாஷ்பேக்
kamalhassan at indian 2 press meet

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, பிரியாபவானிசங்கர் உட்பட பலர் நடித்த இந்தியன் 2 படம், ஜூலை 12ம் தேதி ரிலீஸ். சென்னையில் நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எம்ஜிஆரின் அடிமைப்பெண் செட், கே.பி.சுந்தாரம்பாள் கொடுத்த இட்லி, இந்தியன் 3, ஷங்கர் வருத்தப்பட்டது என பல விஷயங்களை மனம் திறந்து  பேசினார் கமல்ஹாசன். 

செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனக்கு எல்லா படமும் முக்கியமானது. ஒவ்வொரு படமும் பல்வேறு சிக்கல்களை, பல தடைகளை தாண்டிதான் வருகிறது. ஒவ்வொரு படத்திலும் எந்த திசையை நோக்கி போறோம்ங்கிற பதட்டம் இருக்கும். அதேசமயம், ஒவ்வொரு காட்சி முடியும்போது டைரக்டர் முகத்தில் வருகிற பிரகாசம், சக நடிகர்கள் உற்சாகம் ஆகியவை நமக்கு பலம்.  விபத்து, கோவிட் போன்றவற்றை தடைகளை இந்த படம் வந்துள்ளது. நாளைக்கு பார்க்கலாம்னு ஆரோக்கியமாக போனவர்களை அடுத்து பார்க்க முடியலை.  பல  அகால மரணஙகளை நிறைய பார்த்துவிட்டேன். இப்படியெல்லாம் எந்த படத்திலும் எனக்கு நடந்தது இல்லை. நேற்று இந்தியன் 2 பார்த்த சென்சார் போர்டு மெம்பர்கள் பாராட்டினாங்கனு இயக்குனர் டெக்ஸ் அனுப்பினார். பொதுவாக சென்சார் போர்டில் இருப்பவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். வணக்கம் என்று சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள். சில படங்களுக்குதான் இந்த மாதிரி நடக்கும்.


நல்ல தொழில்நுட்பங்களை இப்போது அறிமுகப்படுத்துகிறோம். ஆனாலும், பழசை மறக்கலை. சில சமயம், இ்வ்வளவு துாரம் நாம வந்திட்டோமோனு கிள்ளி பார்த்துக்கொள்கிறேன். முதலில் இந்த படத்தை பார்க்க போறவங்க, என்ன செய்யப்போறாங்கனு நினைப்பாங்க. எதிர்பார்ப்பு இருக்குது. ஷங்கர் படத்துல பாட்டு அழகாக இருக்கும். பிரமாண்டம் இருக்கும். இந்த படத்துல திரைக்கதை அருமையாக இருக்கும். அதை சரியாக செய்தார் என்பதால்தான் இந்தியன் 2வில் நடிக்க ஓகே சொன்னேன். இல்லைன்னா, பார்ட் 2  பண்ணியிருக்கமாட்டேன். பல வியப்புகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.


இந்த படத்துல பல்வேறு காஸ்ட்யூமில் வருகிறேன். அது அலங்கா பொருள் இல்லை. அதுக்கு காரணம் இருக்கிறது. அதுல பல மொழிகள் பேசப்படுது. ஆனால், நடிகனுக்கு ஆதரவாக ஷங்கர் ஷாட் வைக்கலை. காரணம், மேக்கப் அப்படி, காஸ்ட்யூம் அப்படி. சில சமயம் உள்ள எறும்பு ஊர்கிற மாதரிி இருக்கும். வேறு சில பிரச்னைகள்.அதனால், படப்பிடிப்பை கேன்சல் பண்ண வேண்டிய சூழ்நிலை. ஆனால், பல காட்சிகளை செட்டில் இருந்தவர்களை ரசித்தார்கள். அந்த மொழி பேசியதை ரசித்தார்கள். 


நடிகர்களுக்கு ரசிகர்களின் கருணை அதிகம். தவறு செய்தாலும் குழந்தையை கொஞ்சுவது மாதிரி நடத்துவார்கள். என்னை அந்த மாதிரி 65 ஆண்டுகளாக கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். நான் அனைத்து வேலைகளையும் பர்ஃபெக்ட் என்று சொல்லமாட்டேன். காரணம், நான் பல உலக சினிமாக்களை பார்த்து இருக்கிறேன். இப்போதுள்ள பல இளைஞர்கள் நல்லா பண்ணுகிறார்கள். ஆனாலும், அன்பின் காரணமாகவே என்னை பல ஆண்டுகளாக ரசிகர்கள் தோளில் துாக்கி வைத்து இருக்கிறார்கள்.


நான் எப்போது தரம் குறைவதை ஏற்கமாட்டேன். இது போதும், அட்ஜஸ்ட் பண்ணிக்கிடலாம் என்றால் அதை ஏற்கமாட்டேன். கண்ணீர் விட்டு அழுகிற காட்சிகளில் கூட திருப்பதி வராவிட்டால் ,மீண்டும் அழ முயற்சிப்பேன். அந்த காலத்தில் சத்யா ஸ்டூடியோவில் எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்துக்காக ஜெய்ப்பூர் அரண்மனையை செட் போட்டார்கள். அதை பார்த்து, இப்படியெல்லாம் நம்ம படத்துக்கு அமையுமானு ஆசைப்பட்டேன். இந்தியன் 2வில் அதைவிட பிரமாண்ட செட் இருந்தது. ஆனால், என் மேக்கப் காரணமாக அந்த செட்டை முழுமையமாக பார்க்க முடியலை. அந்த செட்டுக்காக பல காலம் காத்திருந்தோம்.வெளியூரில் இருந்து சில பொருள் வர வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம்.

நான் நடிகர் திலகத்துடன் நடித்துவிட்டேன். அவர் என்னை கட்டிபிடித்து இருக்கிறார்.  தோளில் கை போட்டு இருக்கிறார் என நான் திருப்தி அடையவில்லை. இப்போது நட்சத்திர அந்தஸ்து வந்தாலும், இன்றைய மூன்றாம், நாலாம் தலைமுறையுடன் நடிப்பதிில் ஆர்வமாக இருக்கிறேன். நாளைக்கு படப்பிடிப்பு உண்டா என்ற ஆர்வம் ஒரு கலைஞனுக்கு இருந்து கொண்டே இருக்கணும். திருவிளையாடலில் நாகேஷ் அலைவது மாதிரி இன்றைய தலைமுறையினர் கற்க அலைகிறார்கள். அதை கவனமாக பார்க்கிறேன். 

நான் டிகேஎஸ் அவர்களுடன் பழகி இருக்கிறேன். என் வீட்டுக்கு பின்னால் அவ்வையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் இருந்தார். அவரிடம் போய் பழம் நீயப்பா, ஞானப்பழம் நீ யப்பா பாடலை பாடியிருக்கிறேன். அதை பொறுமையாக கேட்டு, எனக்கு இட்லி சுட்டு கொடுத்து இருக்கிறார். அவ்வையாளிடம் ஞான பழம் அல்ல, ஞான இட்லி சாப்பிட்டவன் நான். நான் ஒரு பிரஸ்மீட்டில் 3 பாகம் ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன். அதை விவாதம் ஆக்கிவிட்டார்கள். 2ம் பாகம் பிடிக்காது என்பது மாதிரி ஆக்கிவிட்டார்கள். 6 ஆண்டுகள் எந்த குறையும் இல்லாமல் ஷங்கரிடம் பணியாற்றினேன். ஆனால், அந்த ஒரு பிரஸ்மீட்டால் அவர் வருத்தப்படுகிற மாதிரி ஆகிவிட்டது. குழந்தையிடம் அம்மா, அப்பா பிடிக்குமானு கேட்கலாமா? இந்தியன்2, இந்தியன் 3 இரண்டும் நன்றாக வந்துள்ளது என்று கமல்ஹாசன் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow