Independence Day 2024 : சுதந்திர தினம்.. தலைமைச் செயலகப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.. ட்ரோன்கள் பறக்கத் தடை

Independence Day 2024 Celebrations in Chennai : ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Aug 13, 2024 - 06:37
Aug 13, 2024 - 11:04
 0
Independence Day 2024 : சுதந்திர தினம்.. தலைமைச் செயலகப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.. ட்ரோன்கள் பறக்கத் தடை
Independence Day 2024 Celebrations in Chennai

Independence Day 2024 Celebrations in Chennai : 78வது சுதந்திர தின விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ஆகஸ்ட் 14, 15ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற உள்ளார். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1973ம், ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144-ன் கீழ் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ். ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 08.08.2024 முதல் 23.08.2024 வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு. சென்னையில் 14.08.2024 மற்றும் 15.08.2024 ஆகிய இரு நாட்களிலும், (அரசு ஏற்பாடுகள் தவிர) i) தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் i) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.

இதனிடையே சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் ஒன்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 77வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் என். கண்ணன், ஆர். சுதாகர் மற்றும் கே எஸ் நரேந்திர நாயர் ஆகியோரின் மேற்பார்வையில் காவல் இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் ஒன்பதாயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து முனையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது தவிர சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருக்கும் நபர்கள் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் அந்தந்த காவல் சரகை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 மற்றும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிர படுத்தி முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow