தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி மாற்றம்.. பின்னணி காரணம் இதுவா?

தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டதன் பின்னணியை பார்க்கலாம்.

Jul 16, 2024 - 15:07
Jul 18, 2024 - 10:43
 0
தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி மாற்றம்.. பின்னணி காரணம் இதுவா?
Amutha IAS


தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடமாற்றத்தின் பின்னணியில் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக உள்துறை செயலாளர் அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த குமர குருபரன் சென்னை மாநகர ஆணையர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர் ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டதன் பின்னணியில் வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 

தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான அதிகாரிகளில் ஒருவர் அமுதா ஐஏஎஸ். மதுரையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெரியசாமி ஒரு மத்திய அரசு ஊழியர். அமுதாவின் தாத்தா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. இவருடைய சகோதரர் குமரன் ஐ.எஃப்.எஸ் அதிகாரி. மதுரை கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த அமுதா, மதுரை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.எஸ்ஸி முடித்தார்.  

1994ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக தன் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து திண்டுக்கல், தருமபுரி மாவட்ட ஆட்சியர்,  உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் எனப் பயணித்து பிரதமர் அலுவலக இணைச் செயலர் வரை பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட அமுதா ஐஏஎஸ் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு மணல் கொள்ளை கும்பல்களுக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட அமுதா ஐஏஎஸ் பல லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளார்

முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா இருவரது நல் அபிப்ராயத்தையும் பெற்ற அமுதா ஐஏஎஸ், மகளிர் வளர்ச்சிக்காக என்றுமே செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகபல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதிரடி அமுதா என்று பெயரெடுத்தவர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தன் தமிழுக்காக அவரிடம் பாராட்டுகளைப் பெற்ற அமுதா ஐஏஎஸ், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து பலரது பாராட்டுகளைப் பெற்றார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரது இறுதிச்சடங்கு நிகழ்வுகளையும் எந்த வித சிக்கலும் இன்றி ஒருங்கிணைத்துள்ளார். 

இதனையடுத்து தமிழகத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கே அமுதாவின் பணியைக் கண்ட உயரதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றப் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அமுதா ஐஏஎஸ் கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியில் சேர்ந்தார். 


பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த அமுதா ஐஏஎஸ், அவருடைய பணிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில்  கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்பினார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமிக்கும், ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த அமுதாவிக்கும் முட்டல் மோதல் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின.அமுதா ஐஏஎஸ் இத்துறையை முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அமைச்சர் உயநிதி ஸ்டாலினிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டார்.


இந்த நிலையில் கடந்த மாதம் ஏடிஎஸ்பி வெள்ளதுரை ஓய்வுபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தவே, அடுத்த சில மணி நேரத்தில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்தானதும் உள்துறை வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் தன்னிச்சையாக முடிவெடுத்து சஸ்பெண்ட் செய்தார் என்று தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அப்போதே இடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் உள்துறை சரியாக செயல்பட விடவில்லை என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அமுதா ஐஏஎஸ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow