Independence Day 2024 : சுதந்திர தின நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்

Tamil Nadu Governor RN Ravi Independence Day 2024 Tea Party : சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

Aug 13, 2024 - 12:26
Aug 13, 2024 - 13:05
 0
Independence Day 2024 : சுதந்திர தின நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி  தேநீர் விருந்து.. புறக்கணிக்கும்  திமுக கூட்டணிக் கட்சிகள்
Tamil Nadu Governor RN Ravi Independence Day 2024 Tea Party

Tamil Nadu Governor RN Ravi Independence Day 2024 Tea Party : சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நாளில் இருந்தே ஆளும் திமுக அரசுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம்(Independence Day 2024), குடியரசு தினத்தை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர்(Tea Party) விருந்தளிப்பது வழக்கம். இந்தத் தேநீர் விருந்துகள் மாநிலத்தின் அந்த நேர அரசியல் நிலவரத்தை பிரதிபலிப்பதாகவும் பல தருணங்களில் அமைந்துவிடும். 

கடந்த ஆண்டு இதே போல ஆளுநர் ரவி அளித்த தேநீர்(RN Ravi Tea Party) புறக்கணிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அறிவித்தனர். இதனையடுத்து கனமழையும் சேர்ந்து கொள்ளவே தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டது. கனமழையால் விருந்தினர்களுக்கு அசௌகர்யம் ஏற்படக்கூடாது என்பதால், நிகழ்ச்சி வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அந்தத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தின விழாவின் போது ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர். அதே போல இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை(Governor RN Ravi Tea Party) திமுக கூட்டணி கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்போல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். மேலும், மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுகிறார் ஆளுநர் என அவர் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பர். இதையடுத்து மரியாதை நிமித்தமாக பலரும் கலந்து கொள்வர். தமிழகத்தை பொறுத்தவரை ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்து வரும் சூழலில் தேநீர் விருந்து என்பது சர்ச்சைகளுக்கு பஞ்சமின்றி அரங்கேறி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow