Thirumavalavan : “நடிகர் ரஞ்சித்தின் கருத்து வேதனையளிக்கிறது” - திருமாவளவன் எம்பி

Thirumavalavan about Actor Ranjith Comment on Honour Killing : ஆணவக் கொலை வன்முறை அல்ல, பெற்றோர்களின் அன்பின் வெளிபாடு என நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது வேதனை அளிப்பதாகத் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

Aug 11, 2024 - 13:13
Aug 12, 2024 - 17:34
 0
Thirumavalavan : “நடிகர் ரஞ்சித்தின் கருத்து வேதனையளிக்கிறது” - திருமாவளவன் எம்பி
“நடிகர் ரஞ்சித்தின் கருத்து வேதனையளிக்கிறது” - திருமாவளவன் எம்பி

Thirumavalavan about Actor Ranjith Comment on Honour Killing : சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதானி ஊழல் முறைகேடு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் அதானி போன்றோர் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு அவர்களின் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றம் எஸ்சி/எஸ்டி மக்களை மாநில வாரியாக பல்வேறு குழுக்களாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரம் அளிக்கக்கூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நல்ல எண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை.

பட்டியல் சமூகத்தினரை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி சமூகத்தினர் ஒரே தொகுப்புக்குளாக உள்ளார்கள்.  அதில் கணிசமாக மக்கள் தொகை கொண்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதில் விசிக சார்பில் பங்கேற்று அந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தோம்.

அதன் அடிப்படையில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பது மூன்று அல்லது நான்கு குழுக்களாக பிரித்து அந்த மாநிலங்களில் இருக்கின்ற இட ஒதுக்கீட்டை பங்கு போட்டு தர வேண்டும் அவர்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உள்ளனர். உள் ஒதுக்கீடு என்பது வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பிளவுபடுத்துவது என்பது வேறு. அதை எதிர்த்து வருகின்ற 14ம் தேதி விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். அவருடைய கொலைக்கு காரணமானவர்கள், தூண்டி விட்டவர்கள், திட்டமிட்டவர்கள், பண உதவி கொடுத்தவர்கள் என அனைவரையும் உடனடியாக கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் உடைமைகள் அனைத்தையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் வெளியானது. அப்போது ஆணவக் கொலை குறித்து பேசிய அவர், “பெற்றவர்களுக்குதான் வலி தெரியும், பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம்தான் அது. ஆணவக் கொலை வன்முறை அல்ல” என தெரிவித்திருந்தார். இந்த கருத்து பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. 

மேலும் படிக்க: கோவை - அபுதாபி விமான சேவை; பயணிகளுக்கு தமிழில் வரவேற்பு!

இதுகுறித்து பேசிய திருமாவளவன் எம்பி, “ஆணவக் கொலை குற்றமில்லை என்று சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும். அல்லது மனித நோக்கமாக இருக்க வேண்டும். அதை வைத்து படம் எடுத்து அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று கருதி சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவது, கருத்துக்களை பரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல. ரஞ்சித் இது போன்ற கருத்துக்களை பரப்புவது கவலை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow