Wayanad Rain: என்னது ஆரஞ்சு அலர்ட்டா..! கேரளாவை விடாமல் விரட்டும் மழை... அச்சத்தில் மக்கள்
வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது கேரளாவின் முக்கிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

சென்னை: கேரளாவில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதிலிருந்தே அனைந்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவமழை தீவிரமடைந்து, பல மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரிதும் பாதிக்கப்பாட்டது வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள்.
வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கனமழை காரணமாக நிலச்சரிவுடன் கூடிய கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் இரண்டு கிராமங்களும் முற்றிலுமாக மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனது. இதில் 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்பதே தெரியாமல் இருக்கிறது.
கேரள அரசின் தரவுகள் படி, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 225 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 119 பேரின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. இப்படி சொந்த பந்தகளை இழந்த துயரில் இருந்து மீளாமல் இருக்கும் கேரள மக்களை இன்னும் வாட்டி வதைப்பது போல், தற்போது அம்மாநிலத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதில், இன்று (ஆகஸ்ட் 19) பத்தனம்திட்டா, கோட்டையம், இடுக்கி ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நாளை (ஆகஸ்ட் 20) எர்ணாகுளம் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும் படிக்க - ராகுலைத் தாக்கும் திரிணாமுல் காங்கிரஸ்
மேலும், ஆகஸ்ட் 20ம் தேதி ஆலபுழா, கண்ணூர், காசர்கோட் ஆகிய பகுதிகளுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், ஆகஸ்ட் 21ம் தேதி ஆலபுழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடல் பகுதிகளில் 45 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கைகையால் கேரள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
What's Your Reaction?






