Actor Vikram : “காதல் தொடர்பான படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” - நடிகர் விக்ரம் பூரிப்பு
Actor Vikram will Act Romantic Films : ‘தங்கலான்’ படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும் மற்றும் அனைவரும் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என நடிகர் விகரம் தெரிவித்துள்ளார்.

Actor Vikram will Act Romantic Films : விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்' படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி உட்பட திரைப்படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய விக்ரம், “மதுரை எனக்கு ஸ்பெசலான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரைதான் நினைவுக்கு வரும். மதுரை என்றாலே மக்கள் விடுமுறை, கோயில் பாட்டு, அழகர்கோயில் பாட்டு, கழுதைகள் என அனைத்தும் நினைவுக்கு வரும். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும். இந்த படத்தில் டேனிக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது. அதன்பின் ஆபரேசன் செய்து 3 மாதம் ரெஸ்ட் எடுத்த பின்னர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். படத்துக்காக உயிரை கொடுத்து நடித்தார். டேனி பேசும் ஆங்கிலம் எனக்கே தெரியாது ஆனாலும் அவர் அனைவரோடும் கனெக்ட் ஆகிருவாரு. இந்தியராகவே மாறிவிட்டார். மாளவிகா யார் என்பது இந்த படம் மூலம் அனைவருக்கும் தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த படத்தை தயாரிக்க ஞானவேல் தைரியத்தோடு வந்தார். இந்த படம் அனைவருக்குமான படமாக இருக்கும். ’காந்தாரா’, ‘KGF’ என கன்னடத்திலும், மலையாளத்திலும் தற்போது சிறப்பான படங்கள் வந்துள்ளன. இதேபோன்று இந்த படம் தேசிய அளவிலான படமாக இருக்கும். ‘தங்கலான்’ படம் நம்ம வரலாறு என நீங்கள் பெருமைப்படுவீர்கள். 'தங்கலான்' இந்திய சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும். இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல இருக்கும். பா.ரஞ்சித்தோடு பணி புரிந்தது மகிழ்ச்சி. தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் இருக்கும் நமது மண்வாசனையும் இருக்கும். எந்த படம் நடித்தாலும் அதற்கு ஏற்ப மன ரீதியாக என்னை நான் தயார்படுத்துக்கொள்வேன். அந்த கேரக்டரை உள்வாங்கிய நடிகராக மாறிவிடுவேன். எனது ரசிகர் பட்டாளத்தை தியேட்டரில் பாருங்கள். எல்லா ரசிகர்களுமே எனது ரசிகர்கள்தான். டப்பிங் இல்லாமல் ஒரிஜினிலாக ஸபாட்டில் பேசியது கடும் சிரமமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது. காதல் கதை தொடர்பான படங்கள் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






