Raayan Movie OTT Release Date in Tamil : தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இது தனுஷின் 50வது படம் என்பது கூடுதல் சிறப்பாகும். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் விமர்சணம் ரீதியாக சில சருக்கல்களையும் சந்தித்துள்ளது.
இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களிலேயே அதிகளவு வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசை நொறுக்கியப் படமாக ‘ராயன்’ பார்க்கப்படுகிறது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே ரூ. 116 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உலகளவில் இதுவரை ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த பெருமையை ‘ராயன்’ திரைப்படம்(Raayan Movie) பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ்(Actor Dhanush) அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல் இப்படத்தின் திரைக்கதை, ஆஸ்கர் அகாதெமியின் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தேர்வாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு கதைக்களத்தைத் தாண்டி ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிய பலமாக அமைந்துள்ளது. ரத்தம் தெறிக்கத் தெறிக்க வைக்கப்பட்டுள்ள காட்சிகளின் பேக் கிரவுண்ட் மியூசிக்காக இருக்கட்டும், அண்ணன் - தங்கை பாசக் காட்சிகளின் பிஜிஎம் ஆக இருக்கட்டும், ‘உசுரே நீ’ பாடலாக இருக்கட்டும்.... சந்து பொந்திலும் இண்டு இடுக்கிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்கோர் செய்துவிட்டார். இதைத் தவிர தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் வழக்கம்போல் தங்களது நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் ஜூலை மாதமே வெளியானது. தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது தங்கலான், டிமாண்டி காலனி - 2, ரகு தாதா ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் ராயன்(Raayan Movie) படத்திற்கு தியேட்டர்களில் குறைவான ஸ்கிரீன்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: டிமான்டி காலனி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
இதனால் வருகிற 23ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ராயன்’ திரைப்படம்(Raayan Movie OTT Release Date) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் கலக்கிய ‘ராயன்’ படத்தை ஓடிடி-யில் கண்டு ரசிக்க ரசிகர்களே தயாராக இருங்கள்!