Kalki 2898 AD Movie Box Office Collection : டோலிவுட் ஹீரோ பிரபாஸ் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் ரேஸில் மீண்டும் டாப் கியரில் வேகமெடுத்துள்ளார். பாகுபலி படத்தின் வெற்றியால் இந்தியாவில் அனைத்து மொழி ரசிகர்களிடமும் பிரபாஸுக்கு கிரேஸ் காணப்பட்டது. ஆனாலும் பாகுபலிக்குப் பின்னர் அடுத்தடுத்து தோல்வியால் துவண்டு கிடந்த பிரபாஸுக்கு, கடந்தாண்டு வெளியான சலார் திரைப்படம் கம்பேக் கொடுத்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான சலார், ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் 700 கோடி வரை கலெக்ஷன் செய்து பிரபாஸுக்கு நம்பிக்கை கொடுத்தது.
இதனையடுத்து பிரபாஸின் கல்கி திரைப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல், ராஜமெளலி, துல்கர் சல்மான் ஆகியோரும் கல்கியில் கேமியோவாக நடித்திருந்தனர். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான கல்கி படத்தின் கிராபிக்ஸ், மேக்கிங், விஷுவல், சந்தோஷ் நாராயணனின் இசை ஆகியவையும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி வெளியான கல்கி திரைப்படம், 5 வாரங்களாக தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் நான்-ஸ்டாப்பாக வசூலித்து வருகிறது. கடந்த 13ம் தேதி கடைசியாக வெளியான பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்டில் கல்கி படம் ஆயிரம் கோடி கலெக்ஷன் செய்திருந்தது. இதனையடுத்து தற்போது 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தாண்டு இந்தியாவில் அதிகம் வசூலித்த படமாகவும் கல்கி 2898 AD சாதனை படைத்துள்ளது. பான் இந்திய மொழிகளில் வெளியான கல்கி 2898 AD கலவையான விமர்சனங்களே பெற்றது.
மகாபாரதத்தை பின்னணியாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் நாக் அஸ்வின். அடுத்தாண்டு கல்கி இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கல்கி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் 600 கோடி ரூபாய் பட்ஜெட் என சொல்லப்படுகிறது. அப்படியானால் முதல் பாகத்திலேயே 1100 கோடி வசூலித்துள்ள கல்கி, 500 கோடியை லாபமாக பார்த்துள்ளது. இரண்டாவது பாகம் வெளியாகும் போது இந்த லாபம் ஆயிரம் கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவையும் கல்கி தயாரிப்பாளருக்கு கோடிகளில் லாபத்தை கொடுத்துள்ளதாம்.
மேலும் படிக்க - கோட் படத்துக்கு விஜய் கொடுத்த நச் விமர்சனம்!
முதல் நாளில் 190 கோடி, முதல் 5 நாட்களில் 500 கோடி என ஆரம்பம் முதலே கல்கி படத்துக்கு நல்ல வசூல் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸான பதான், ஜவான் என இந்த இரண்டு படங்களும், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தன. இன்னொரு பக்கம் கேஜிஎஃப் மூவி மூலம் கன்னட ஹீரோ யாஷ் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வந்தார். ஆனால், கல்கி திரைப்படம் மூலம் பிரபாஸ் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது டோலிவுட் திரையுலகிற்கு உற்சாகம் கொடுத்துள்ளது.