GOAT First Review: ”சும்மா தெறிக்குது..” கோட் படத்துக்கு விஜய் கொடுத்த நச் விமர்சனம்!
Goat Movie First Review in Tamil : விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு விஜய் கொடுத்துள்ள விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Goat Movie First Review in Tamil : விஜய்யின் 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல், கோட் படத்தின் முதல் இரண்டு பாடல்களையும் விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிப்பது கன்ஃபார்ம் ஆனது. முன்னதாக விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தி கோட் திரைப்படம் எந்த மாதிரியான ஜானரில் உருவாகிறது என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், கண்டிப்பாக ஆக்ஷன் ப்ளஸ் ஃபேமிலி சென்டிமெண்ட்டில் பக்கா கமர்சியலாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. தி கோட் ரிலீஸாக இன்னும் 42 நட்கள் மட்டுமே உள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட படக்குழு பிளான் செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் முதல் வாரத்தில் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கோட் படத்தை பார்த்துவிட்டு விஜய் கொடுத்த விமர்சனத்தால், ஒட்டுமொத்த படக்குழுவே உற்சாகத்தில் உள்ளதாம். அதாவது தி கோட் முதல் பாதி முழுவதையும் முடித்துவிட்ட வெங்கட் பிரபு, அதனை விஜய்க்கு ஸ்க்ரீன் செய்து காட்டியுள்ளார். அதனை பார்த்துவிட்டு ”படம் சும்மா தெறிக்குதே” என தளபதி விஜய் கமெண்ட்ஸ் கொடுக்க, வெங்கட் பிரபு & டீம் செம ஹேப்பி அண்ணாச்சி மோடுக்கு மாறியுள்ளனர். முதல் பாகத்துக்கே இப்படியொரு விமர்சனம் என்றால், இரண்டாவது பாதியில் தான் இன்னும் தரமான சம்பவங்கள் இருப்பதாக இன்னொரு தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி தி கோட் படத்தில் நடித்து வரும் அஜ்மல் அப்டேட் கொடுத்துள்ளார். அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அஜ்மல், தி கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘விசில் போடு’ பாடலில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா டீமுடன் அஜ்மலும் ஆட்டம் போட்டிருந்தார். வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தில் அஜித்தும் அவரது குழுவும் ஒரு கண்டெய்னரையே கடத்தி பணத்தை கொள்ளையடிக்கும். அந்த சீன் தியேட்டரில் வரும் போதும் சரி, இப்போது தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் சரி, ரசிகர்களுக்கு செம கூஸ்பம்ஸ் கொடுக்கும்.
இந்த காட்சியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தி கோட் படத்தில் ஒரு தரமான சம்பவம் வைத்துள்ளாராம் வெங்கட் பிரபு. அதில் விஜய் & டீம் ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் ட்ரீட் வெறித்தனமாக இருக்கும் என அஜ்மல் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது.
What's Your Reaction?