Actress Namitha Issue : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நமீதாவிற்கு நடந்த சம்பவம்.. வருத்தம் தெரிவித்த சேகர்பாபு

Minister Sekar Babu About Actress Namitha Issue : சகோதரி நமீதா மனது புண்படும்படி, சட்டத்திற்கு புறம்பாக எது நடந்திருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாளார். நமிதா வருத்தப்பட வேண்டாம் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Aug 27, 2024 - 11:42
Aug 27, 2024 - 12:39
 0
Actress Namitha Issue : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நமீதாவிற்கு நடந்த சம்பவம்.. வருத்தம் தெரிவித்த சேகர்பாபு
hrce minister sekar babu talks about actress namitha

Minister Sekar Babu About Actress Namitha Issue : "மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை நமிதாவிற்கு நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு உடனடியாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நமிதா மனது புண்படும்படி, சட்டத்திற்கு புறம்பாக எது நடந்திருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், நமிதா வருத்தப்பட வேண்டாம், அவர் வருத்தப்படுவதாக இருந்தால் நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதாவை அதிகாரிகள் கோவிலுக்கு வெளியே நிற்க வைத்ததாகவும், என்ன ஜாதி என்ன மதம் என கேட்டு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார் நமீதா. இந்தியா முழுவதும் தெரிந்த தன்னை வேண்டுமென்றே மதத்தை கேட்டு புண்படுத்தியதாக வீடியோவில் கூறியுள்ளார் நமீதா. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு. 

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்து 39 மாதங்களில் கோவில் திருப்பணிகளுக்கு பெரிய அளவு முக்கியத்துவம் தந்து வருவதாகவும், கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் தொடர்ந்த ஆய்வு செய்து பக்தர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்கின்ற வகையிலும் அனைத்து வேலைகளையும் துறை செய்து வருகிறது...

இந்த திருக்கோவிலில் பொருத்தவரை 81 லட்சம் மதிப்பில் மரத்தேர் உட்பட 3.86 கோடி மதிப்பீட்டு 29 பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது...
முதல்வர் உத்தரவின் பேரில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஆறு கோடி செலவில் தங்கத்தேர் செய்யும் பணியும் நடைபெற உள்ளது, மரத் தேர் திருப்பணி நிறைவடைந்து இருக்கிறது, இந்த கோவிலில் 90 சதவீத பணிகள் நிறைவுற்றிருக்கிறது...

39 மாதங்களில் 2000 குடமுழுக்குகளை தாண்டியது இந்து சமய வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 6,850 ஏக்கர் நிலம், 6,770 கோடி 36 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது,ஆட்சி ஏற்பட்டபட்ட பிறகு குடமுழுக்குகள் என்பது பக்தர்கள் கொண்டாடும் அளவிற்கு  நடந்து வருகிறது, 72 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.

முருகர் மாநாட்டை புதிதாக கையில் எடுத்தது போல் ஒரு சிலர் கூறி வருகின்றனர், முருகன் மாநாட்டில் எந்தவிதமான அரசியலும் இல்லை, முருகர் மாநாடு வரலாற்றில் ஒரு மயில் கல், கலைஞர்கள் அறிஞர்கள் சான்றோர்கள் இனமொழி மதத்திற்கு அப்பாற்பட்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூட மாநாட்டில் பங்கேற்றனர், சமய சார்பற்ற மாநாடு அல்லாமல் அனைவரும் பங்கேற்ற ஒரு மாநாடாக விளங்கியது என்பது ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கத்தான் செய்யும்.

891 பேர் இதுவரை மூத்தகுடி மக்கள் அறுபடை வீடுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர், எந்த ஒரு செயலாக இருந்தாலும் செய்யப்படும் நற்காரியத்தை விட மாற்றுக் கருத்து வரும் பொழுது தான் அந்த செயல் இன்னும் உறுதி படுகிறது தெளிவு பெறுகிறது. இந்து சமய அறநிலைத்துறையை பொறுத்த வரை முழுக்க முழுக்க திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் தான் கந்த சஷ்டி கவசத்தை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளோம் எங்கள் தீர்மானத்தில் தெளிவாக தெரிவித்ததுள்ளோம்.

நமீதாவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அனுமதிக்காமல் இந்து என்ற சான்றிதழ் கேட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சேகர்பாபு, ஏற்கனவே பழனி திருக்கோவிலில் ஒரு பிரச்சினை தொடர்பான வழக்கில் வந்த தீர்ப்பின் அவர் இஸ்லாமியராக இருக்க வாய்ப்பு இருந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நமிதா பதிவை கேட்டேன், இது குறித்து விசாரிப்பதற்கு உடனடியாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார், நமிதா மனது புண்படும்படி, சட்டத்திற்கு புறம்பாக எதுவாக நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், நமிதா வருத்தப்பட வேண்டாம், அவர் வருத்தப்படுவதாக இருந்தால் நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் சேகர்பாபு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow