Minister Sekar Babu : முருகன்தான் ஸ்டாலினை முதல்வர் ஆக்கினார்... ஒரே போடாக போட்ட சேகர்பாபு

Minister Sekar Babu About Chief Minister MK Stalin : முதலமைச்சர் உத்தரவு கொடுத்தால் , முருகன் அருள் ஆசியும் இருந்தால் இது போன்ற மாநாடு தொடரும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஸ்டாலினை முதல்வர் ஆக்கியதே முருகன்தான் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Aug 27, 2024 - 11:32
Aug 27, 2024 - 12:36
 0
Minister Sekar Babu : முருகன்தான் ஸ்டாலினை முதல்வர் ஆக்கினார்... ஒரே போடாக போட்ட சேகர்பாபு
Minister Sekar Babu About Chief Minister MK Stalin

Minister Sekar Babu About Chief Minister MK Stalin : முருகனின் பெருமை கடல் கடந்து சென்று சேர தமிழக முதலமைச்சர் கையில் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தான் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நமது தலைவரை முதலமைச்சராக ஆக்கினார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.முருகனும் இன்னும் பல கடவுள்களும் சேர்ந்து தான் ஸ்டாலினை முதல்வராக ஆக்கினார்கள் என்றும் தெரிவித்துள்ளார் சேகர்பாபு.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, முருகன் சம்பந்தப்பட்ட இலக்கியங்களில் முருகன் பற்றி தெரிந்து கொள்ள அது சம்பந்தமான போட்டிகளை நடத்தி பெறுபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தான் கந்தசஷ்டி கவசம் கொண்டுவரப்பட்டுள்ளது இது குறித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக நண்பர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


புரட்டாசி மாதத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 1000 பேரை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முத்தமிழ் முருகன் மாநாடு வரக்கூடிய ஆண்டுகளில் நடக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,முதலமைச்சர் உத்தரவு கொடுத்தால் , முருகன் அருள் ஆசியும் இருந்தால் இது போன்ற மாநாடு தொடரும் என்றார். 

ஆன்மீகத்தை கையில் எடுக்காமல் அரசியல் செய்ய முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த சேகர்பாபு,வேலை தூக்கி அவர்கள் கூட ஊர் ஊராக அலைந்தார்கள். முருகனின் பெருமை கடல் கடந்து சென்று சேர தமிழக முதலமைச்சர் கையில் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தான் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நமது தலைவரை முதலமைச்சராக ஆக்கினார்கள் என்று கூறினார். 

நாடாளுமன்ற தேர்தலில் கூட பல்வேறு வகைகளில் ஆன்மீகத்தை கையில் எடுக்க முயற்சித்தார்கள்.மீண்டும் 2024 அவர்களின் கருத்துக்களை புறக்கணித்து தமிழகம் முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்தி உள்ளனர். முருகனின் பெருமை கடல் கடந்து சென்று சேர தமிழக முதலமைச்சர் கையில் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தான் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நமது தலைவரை முதலமைச்சராக ஆக்கினார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.முருகனும் இன்னும் பல கடவுள்களும் சேர்ந்து தான் ஸ்டாலினை முதல்வராக ஆக்கினார்கள் என்றும் தெரிவித்துள்ளார் சேகர்பாபு.


யார் வேண்டுமானாலும் என்ன கருத்தை வேண்டுமானாலும் கூறலாம் யாரிடம் இருந்து கருத்து வருகிறது என்பதுதான் முக்கியம்.அம்மன் மாநாடு நடத்துவது குறித்து முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

அனைவரும் எங்களை சார்ந்து கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று நாங்கள் நினைப்பவர்கள் இல்லை. சுதந்திர நாடு அனைவர் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வோம். இது அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் அல்ல இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பள்ளி கல்லூரிகளில் தான் தொடங்குகிறோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோருக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் தெரிவித்துவிட்டோம். 

திராவிட முன்னேற்றக் கழகமே ஜனநாயக கட்சி இது போன்ற கருத்துக்களை மகிழ்ச்சியோடு வரவேற்பவர்கள் நாங்கள். அதை எதிர்த்து எதிர்மறை கருத்துக்களை கூற நாங்கள் விரும்பவில்லை.எங்கெல்லாம் சாத்திய கூறுகள் எல்லாம் அங்கு எல்லாம் படிப்படியாக அன்னை தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுப்போம். 
தமிழக முதலமைச்சர் அன்னை தமிழில் குடமுழுக்கு என்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என்றார் சேகர்பாபு. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow