Annamalai : ’பேசுறதே சரியில்ல.. ஆக்‌ஷன் எடுங்க..’ அண்ணாமலை மீது பரபரப்பு புகார்..

Annamalai Case in Madurai : அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதுராக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.

Aug 27, 2024 - 12:04
Aug 27, 2024 - 12:43
 0
Annamalai : ’பேசுறதே சரியில்ல.. ஆக்‌ஷன் எடுங்க..’ அண்ணாமலை மீது பரபரப்பு புகார்..
Annamalai Case in Madurai

Annamalai Case in Madurai : தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலை ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024லிலும் கூட்டணி தொடரும் என இருகட்சிகளும் அறிவித்தன. இதனைத்தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலுக்காக, இபிஎஸ்-ஐ டெல்லி அழைத்து பேசியது பாஜக தலைமை. அப்போது, 20 தொகுதிகளை பாஜக கேட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக இபிஎஸ் இடம் பாஜக தலைமை தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த நிபந்தனைகளை இபிஎஸ் ஏற்க்கவில்லை.  அதுமட்டுமன்றி கூட்டணி தர்மத்தை மீறு ஜெயலலிதா, அண்ணா ஆகியோர் பற்றி அவதூறாக அண்ணாமலை பேசிவந்ததாக அதிமுக அவரை எதிர்க்கத்தொடங்கியது. இதனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என உணர்ச்சிவசப்பட்டு கூறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 

இதனால் அரசியல் களம் பரபரப்பாக மீண்டும் டெல்லி சென்றனர் அதிமுகவினர். டெல்லியில் அண்ணாமலையின் பதவியை பறிக்க அதிமுகவினர் கோரியதாகவும், அதனை அவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுமையாக ஆத்திரமடைந்தனர் அதிமுகவினர். இதனைத்தொடர்ந்து இபிஎஸ் தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடத்தி, 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று 2023ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அறிவித்தது. இதனால் அதிமுகவும் பாஜகவும் அன்று முதல் இந்நாள் வரை கீரியும் பாம்புமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதுராக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ”நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளராக உள்ளேன். எங்களுடைய கழகத்திற்கும் கழகத்தின் பொதுச் செயலாளர், எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடும் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 25.08.2024ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் கெட்ட எண்ணத்துடன் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார்.

மேலும் படிக்க: ”விசாரணையை எதிர்கொள்ளத் தயார்” ..இபிஎஸ் கொடுத்த மனு.. அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

மேலும் எங்களது கட்சியையும் எங்களது கட்சியின் பொதுச்செயலாளரையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். எனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”, என குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிமுக பாஜக இடையே மேலும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow