DMK MP Dayanidhi Maran : ”விசாரணையை எதிர்கொள்ளத் தயார்” ..இபிஎஸ் கொடுத்த மனு.. அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
DMK MP Dayanidhi Maran Defamation Case : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம். திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
DMK MP Dayanidhi Maran Defamation Case : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு எழும்பூர் 13வது பெருநகர மாஜிஸ்ட்ரேட் எம்.தர்மபிரவு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (27.08.2024) நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு இரண்டாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகியதால் நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினரும் அதிமுக மாவட்டச் செயலாளர்களும் ஒன்று கூடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
மேலும் படிக்க: திருமணம் செய்யும் திட்டம் இருக்கா.. வந்து விழுந்த கேள்வி.. புன்னகையை பதிலாக கொடுத்த ராகுல் காந்தி
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக அவர் பதிலளித்தார். மேலும், விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
What's Your Reaction?






