Rahul Gandhi Marriage Plans : திருமணம் செய்யும் திட்டம் இருக்கா.. வந்து விழுந்த கேள்வி.. புன்னகையை பதிலாக கொடுத்த ராகுல் காந்தி

Rahul Gandhi Marriage Plans : திருமணம் குறித்து மாணவிகளின் விளையாட்டுத்தனமான கேள்விகளுக்கு புன்னகையுடன் ராகுல்காந்தி பதிலளித்தார். திருமணம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி.

Aug 27, 2024 - 10:51
Aug 27, 2024 - 12:24
 0
Rahul Gandhi Marriage Plans : திருமணம் செய்யும் திட்டம் இருக்கா.. வந்து விழுந்த கேள்வி.. புன்னகையை பதிலாக கொடுத்த ராகுல் காந்தி
rahul gandhi opens up about his marriage plans

Rahul Gandhi Marriage Plans : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியிடம் பொதுவாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று அவரது திருமணம். 54 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர், “எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, “விரைவில் நடக்கும்” என்று பதில் அளித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் ஸ்ரீநகருக்கு பயணம் செய்த போது அங்குள்ள மாணவிகளுடன் கலந்துரையாடியாடினார். அதுகுறித்த வீடியோவை ராகுல்காந்தி  தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வரவிருக்கும் தேர்தல், ஜம்மு காஷ்மிரின் நிலை, பெண்களின் பாதுகாப்பு, ராகுல்காந்தியின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பேசினார். திருமணம் குறித்து மாணவிகளின் விளையாட்டுத்தனமான கேள்விகளுக்கு புன்னகையுடன் ராகுல்காந்தி பதிலளித்தார். 

திருமணம் செய்யும் ப்ளான் இருக்கா என்ற மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, நான் 20-30 ஆண்டுகளாக அந்த அழுத்தத்தை தாண்டிவிட்டேன். திருமணம் செய்யும் திட்டம் ஏதுமில்லை. ஆனால் அது நடந்தால்...” என சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 

அப்போது மாணவிகள் கோரஸ் ஆக எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள் என்று மாணவிகள் ஒரே குரலில் தெரிவித்தனர். “அழைக்கிறேன்” என்று சிரிப்பொலிக்கு மத்தியில் ராகுல்காந்தி கூறினார்.தொடர்ந்து விவாகரத்து விகிதம் குறித்தும் சமூக அழுத்தங்கள் குறித்தும் திருமணங்கள் பற்றிய அச்சத்தை மாணவிகள் பகிர்ந்து கொண்டனர். 

டெல்லியில் இருந்து காஷ்மீரை இயக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று மாணவிகள் தெரிவிக்கவே அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, என்னைப்பொறுத்தவரை பிரதமர் மோடியின் பிரச்னை என்னவென்றால் அவர் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் சொல்வதுதான் சரி என்று நம்பும் ஒருவருடன் எனக்கு பிரச்சனை உள்ளது. அவர் செய்வது தவறு என்று அவருக்குக் காட்டுவதைப் பார்த்தாலும், அவர் ஏதாவது பிரச்சனையை உருவாக்குவார். இது பாதுகாப்பின்மையிலிருந்து வருகிறது, அது வலிமையிலிருந்து வரவில்லை. பலவீனத்திலிருந்து வருகிறது.

இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருந்து மாநில அந்தஸ்து பறிக்கப்படுவது இதுவே முதல்முறை. காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அது நடந்த விதம், எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இப்போது எங்களைப் பொறுத்தவரை மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவதே கொள்கையாகும், அதில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பிரதிநிதித்துவமும் அடங்கும். மோடி வைத்திருக்கும் நிலை டெல்லியில் இருந்து காஷ்மீரை இயக்கும் நிலை. இதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினார் ராகுல் காந்தி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow