Hidden Camera : ஹோட்டலில் கழிவறையை யூஸ் பண்றீங்களா?.. பெங்களூரில் நடந்த அசிங்க சம்பவம்.. கவனம் பெண்களே!

Hidden Camera Found in Washroom at Bengaluru : பெங்களூருவின் பிரபல காபி நிறுவனத்தின் பணிப்புரிந்துவரும் ஊழியர் ஒருவர் பெண்களின் கழிவறையில் வைக்கப்பட்டுள்ள கழிவறை குப்பைத்தொட்டியில் ஸ்மார்போட்டை மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 12, 2024 - 11:40
Aug 13, 2024 - 09:37
 0
Hidden Camera : ஹோட்டலில் கழிவறையை யூஸ் பண்றீங்களா?.. பெங்களூரில் நடந்த அசிங்க சம்பவம்.. கவனம் பெண்களே!
third wave coffee outlet in bengaluru

Hidden Camera Found in Washroom at Bengaluru : பெங்களூருவில் உள்ள தேர்டு வேவ் என்ற காபி ஷாப் ஒன்றின் கழிவறையில் குப்பைத்தொட்டியில் செல்போனை மறைத்து வீடியோ பதிவு செய்த நபர் வசமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தொடர்புடைய நபரை நாங்கள் உடனடியாக கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று அந்த காபி ஷாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

BEL ரோடு பகுதியில் உள்ள தேர்டு வேவ் காஃபி ஷாப் ஒன்றின் கழிவறைக்கு சென்ற பெண் ஒருவருக்கு கழிவறையில் இருந்த குப்பைத்தொட்டியில் ஏதோ கேமராவின் பகுதி உள்ளது போன்று தெரிந்துள்ளது.சந்தேகமடைந்த அப்பெண் சோதனை செய்து பார்த்ததில் ஸ்மார்ட்போன் ஒன்று சத்தம் வரக்கூடாது என்பதற்காக ஏரோபிளைன் மோடில் இருப்பதை கண்டறிந்துள்ளார்.

அதில் வீடியோ ஆன் செய்யப்பட்ட நிலையில், டாய்லட் ஷீட்டை படம் பிடிக்கும் வகையில் குப்பைத்தொட்டியில் வைக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார். இந்த கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக காபி ஷாப்பின் உரிமையாளரிடத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், அதனை சோதனை செய்தபோது, கிட்டதட்ட 2 மணி நேரமாக ஸ்மார்ட்போனின் வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, செல்போனுக்கு சொந்தமான நபர் பணி நீக்கம் செய்யப்பட்ட சூழலில், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இது குறித்து காவலர்கள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இதனை நேரில் கண்ட நபர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்து இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள எங்களின் பெல் ரோடு கடையில் நடந்த இந்த சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது போன்ற சம்பவங்களுக்கு கடுமையாக எங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்கிறோம். இதில் தொடர்புடைய நபரை நாங்கள் உடனடியாக கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் உள்ள கழிவறைகளையோ, ஜவுளி நிறுவனங்கள், ஹோட்டல்களில் கழிவறை, உடைமாற்றும் அறைகளை பெண்கள் பயன்படுத்தும் முன்பாக கவனமாக ஒருமுறைக்கு இருமுறை செக் செய்து கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுறுத்தலாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow