Arulnidhi : அடுத்து ரொமான்ஸ் பண்ண ஆசை...அண்ணன் உதயநிதி பாராட்டினாரு... நடிகர் அருள்நிதி

Demonte Colony 2 Actor Arulnidhi Speech : டிமான்டி காலனி2 படம் பார்த்துவிட்டு அண்ணன் உதயநிதி பாராட்டினார். அடுத்து இந்த படத்தின் 3வது பாகம் மட்டுமல்ல, 4வது பாகமும் வரும். அண்ணன் உதயநிதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறவில்லை என்று அருள்நிதி பேட்டி

Aug 12, 2024 - 11:32
Aug 13, 2024 - 09:37
 0
Arulnidhi : அடுத்து ரொமான்ஸ் பண்ண ஆசை...அண்ணன் உதயநிதி பாராட்டினாரு... நடிகர் அருள்நிதி
டிமான்டி காலனி2 அருள்நிதி

Demonte Colony 2 Actor Arulnidhi Speech : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், அர்ச்சனா நடித்த டிமான்டி காலனி 2 படம், ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ்(Demonte Colony 2 Release Date) ஆகிறது. அந்த படம் குறித்தும், அடுத்தடுத்த படங்கள் குறித்தும், அண்ணன் உதயநிதி, சினிமா ஸ்டிரைக் பற்றியும் குமுதத்துக்கு அருள்நிதி அளித்த பேட்டி:

கே:இதுவரை 15 படங்கள் பண்ணியிருந்தாலும், டிமான்டிகாலனி மட்டும் 2வது பாகமாக உருவாக காரணம் என்ன?

ஒரு படத்தோட வெற்றியும், மக்களின் ஆர்வமும்தான் அடுத்த பார்ட் வரணும் என்பதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் டிமான்டிகாலனி பார்ட் 2 வரணும்னு ரொம்ப வருஷமாக நினைச்சோம். முதற்பாகத்திலயே 2ம் பாகத்துக்கு லீடு கொடுத்தும் இருந்தோம். ஒரு சரியான கரு கிடைத்தவுடன் ஆரம்பித்துவிடலாம்னு இயக்குனர் அஜய்ஞானமுத்து சொன்னாரு. ஒரு கட்டத்தில் அனைத்தும் செட்டானது. 9 ஆண்டுகளுக்குபின் இப்ப 2வது பாகம் வருகிறது. 

கே: முதற்பாகத்துக்கும் இரண்டாவது பாகத்துக்கும் என்ன தொடர்பு?

முதற்பாகத்தில் ஸ்ரீனியாக வந்தேன். இந்த பாகத்தில் ரகுவாக வருகிறேன். ரகு ஒரு கட்டடகலை வடிவமைப்பாளர், அவருக்கும் முதற்பாகத்தில் இருந்த ஸ்ரீனிக்கும் என்ன தொடர்பு, எப்படி இரண்டு கதைகளும் ஒன்று சேருகின்றன என்பதை அவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். என்னை தவிர, பிரியாபவானிசங்கர், அருண்பாண்டியன், அர்ச்சனானு நிறைய வலுவான கேரக்டர்களும் இருக்கின்றன. படத்துல காமெடியும் இருக்கிறது.

கே: பிரியாபவானிசங்களுக்கு அதிக முக்கியத்துவம் போல

முதற்பாகத்தில் என்னை மட்டுமல்ல, மற்ற கேரக்டர்களையும் பேச வைத்தார் இயக்குனர். இந்த பாகத்தில் பிரியாபவானிசங்கருக்கு படம் முழுக்க வருகிற நல்லதொரு வேடம். ஒரு படத்தில் அனைத்து கேரக்டர்களும் நடிக்கணும். அப்பதான் படம் ஹிட்டாகும். 

கே: சரி, டிமான்டி காலனி 3ம் பாகம் வருமா?

நல்லா கேட்டீங்க. நாலாவது பாகம் கூட வரும். 2வது பாகம் கதை எழுதியபோதே 3வது பாகம், 4வது பாகத்துக்கும் கதையை தயார் செய்துவிட்டார் இயக்குனர். 2ம் பாகத்தின் கிளைமாக்சில் 3 பாகம் லீடு வைத்துள்ளோம். அடுத்த ஆண்டு 3ம் பாகம் வரலாம். 2027ல் நாலாம்பாகம் வரலாம். இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி கூட பார்ட் 2வது வருவது மாதிரிதான் கதையை முடித்து இருக்கிறோம்.

கே: இப்படிப்பட்ட பேய் கதைகளை உங்க குடும்பத்தில் ரசிக்கிறார்களா?

என் அம்மா வழி பாட்டியான ஜெயலட்சுமி, டிமான்டிகாலனி முதற்பாகம் பார்த்து மிரண்டு விட்டார். பேய் கெட்டப்பில் இருக்கும் போது என் கண்களை பார்த்துவிட்டு, ஐய்யோ, என்ன இப்படி இருக்கிறார் என்று பீல் பண்ணியிருக்கிறார். அவரிடம் இது நடிப்பு, இது கெட்டப் என விளக்கியிருக்கிறார்கள். என் மகனுக்கு ஏனோ, நான் நடித்த டிபிளாக் அதிகம் பிடிக்கிறது. அதை அடிக்கடி பார்த்து ரசிக்கிறார். அம்மாவுக்கு நான் அழகாக, கம்பீரமாக இருந்தால் பிடிக்கும். 

கே: டிமான்டி 2காலனி படத்தை ரெட்ஜெயன்ட் வெ ளியிடுகிறது. இப்போது அமைச்சராாக இருக்கம் அண்ணன் உதயநிதி பார்த்துவிட்டாரா?

ஆம், படம் அவருக்கு பிடித்து இருக்கிறது. மேக்கிங் நல்லா இருக்குது, திரில்லர் செட்டாகி இருக்கிறது என்று பாராட்டினார். என் நடிப்பையும் பாராட்டினார். ஆகஸ்ட் 15 நிறைய தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

கே: தொடர்ச்சியாக டார்க் படங்கள், அழுத்தமான கதைகளில் நடிப்பது ஏன்?

இந்த கேள்வியை என்னிடம் அதிகம் கேட்கிறார்கள். கடைசி சில படங்கள் அப்படி அமைந்ததால் அந்த இமேஜ் வந்துவிட்டது. ஆனால், அடுத்து நடித்து வரும் படங்கள் வித்தியாசமானவை. அடுத்து கணேஷ் விநாயக் இயக்கத்தில் ஒரு படம், என்னங்க சார் சட்டம் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அது ரொ மாண்டிக் கலந்த காமெடி படம். 

கே: கழுவேத்தி மூர்க்கன் படமும், அந்த மீசை கெட்டப்பும் பேசப்பட்டதே?

அண்ணன் நடித்த மாமன்னன் கதை மாதிரி, கழுவேத்தியும் அழுத்தமான படம். அந்த படமும், நான் பல மாதம் வைத்திருந்த அந்த மீசை கெட்டப்பும் பேசப்பட்டது. ஓடிடியில் படம் வெளியான பின் மக்களிடம் இன்னும்  அதிகமாக அந்த கருத்து மக்களிடம்  சேர்ந்தது. அந்த இயக்குனருடன் ஒரு படம் பண்ண வாய்ப்பு

கே: இப்படிப்பட்ட கேரக்டரி்ல நடிக்கணும்னு ஆசை இருக்கிறது

ஒரு பக்கா ரொமான்ஸ் படம் பண்ண ஆசை. அண்ணன் உதயநிதியுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன். அது நிராசை ஆகிவிட்டது. இப்போது அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். எந்த காலத்திலும் எனக்கு படம்  டை ரக் ஷன் பண்ண ஆசை இல்லை. அது கஷ்டம்.

கே: ஆகஸ்ட் 15ம் தேதிக்குபின் சினிமாவில் பூஜை கூடாது. நவம்பர் 1ம் தேதிக்குபின் சினிமா ஸ்டிரைக். எந்த பணிகளும் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கைவிட்டுள்ளது.நீங்களும் சில படங்களில் நடிக்கிறீர்கள். ஸ்டிரைக்கால் அந்த பணிகளுக்கு பாதிப்பு வராதா?

நாம் எல்லாரும் சினிமா என்ற குடும்பத்தில் இருக்கிறோம் என்று அனைவரும் நினைக்க வேண்டும். பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்வடும். விரைவில் விரிசல்கள் சரி செய்யப்படும். அனைத்தும் சீக்கிரம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் என்று முடிக்கிறார் அருள்நிதி

 
***

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow