கண்ணீர் விட்டு அழுத விஷால்.. விஜய்யின் த.வெ.க.வில் இணையும் அறிகுறியா?
புதுச்சேரியில் கண்ணீர் விட்டு அழுது சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலை துவங்கட்டும், நான் இணைவது அப்பாற்பட்டது என தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச் செயலாளரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான நடிகர் விஷால், கடலூரில் ரசிகர் மன்ற தலைவரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து கடலூருக்கு சென்றார். அவர் புதுச்சேரி வழியாக சென்றபொழுது, புதுச்சேரி மாநில விஷால் தலைமை மன்றம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருகே இருந்த ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால் கண்ணீர் விட்டு அழுது சாமி தரிசனம் செய்தார் இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து ரசிகர்கள் ஆலுயர மாலை மற்றும் சால்வை அணிவித்தனர் மேலும் பொதுமக்களுக்கு புடவை அரிசி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "நான் மக்களோடு மக்களாக இருக்கிறேன் மக்களும் நானும் வேறல்ல எல்லோரும் ஒன்றுதான் எனது அரசியலை மக்கள் முடிவு செய்யட்டும் நான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்கள் சொல்லட்டும் எல்லோரும் அரசியல்வாதிகள் தான் என்றும் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் பயணிப்பீர்களா என்ற கேள்விக்கு, "முதலில் அவர் பயணிக்கட்டும். அவர் ஆரம்பிக்கட்டும் அவருடைய தொடக்கம் தான் முக்கியம் கட்சியை துவக்கியுள்ளார் அரசியலை ஆரம்பிக்கட்டும் நான் இணைவது அப்பாற்பட்டது. நீட் தேர்வினால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் பலரது உயிர் பிரிந்துள்ளது. இது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம், செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளாராம் விஜய். இதுபற்றியும் விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்தாண்டுக்கான கல்வி விருது விழாவில், நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் விஜய் பேசியிருந்தார். அதற்கான தீர்வுகள் பற்றியும் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார். நடிகர் விஷாலும், நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், விஜய்யுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றோ அல்லது மறுப்பு தெரிவித்தோ விஷால் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய கட்சிகளில் இருந்தும் பல முன்னணி தலைவர்களும், நடிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்த நிலையில், விஷாலின் இந்த கருத்து இருவரும் இணைந்து செயல்படுவதற்கான அறிகுறிதான் என்று கருதுகின்றனர்.
What's Your Reaction?






