சினிமா

OTT Release Movie List : ராயன், கல்கி, ஜமா... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் முழு லிஸ்ட்!

This Week OTT Release Movie List 2024 : தனுஷின் ராயன், பிரபாஸ் நடித்த கல்கி உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

OTT Release Movie List : ராயன், கல்கி, ஜமா... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் முழு லிஸ்ட்!
ஆகஸ்ட் 23 ஓடிடி ரிலீஸ் அப்டேட்

This Week OTT Release Movie List 2024 : தனுஷின் ராயன் திரைப்படம் இந்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. தனுஷின் 50வது படமான ராயனை அவரே இயக்கி நடித்திருந்தார். கடந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான ராயன், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் ஏஆர் ரஹ்மானின் இசைக்காகவே இந்தப் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்தனர். இதனால் ராயன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தனுஷுடன் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், தனுஷின் ராயன் நாளை (ஆக.23) முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. 

அதேபோல், ஓடிடி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த கல்கி 2898 ஏடி திரைப்படம், இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிவருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான கல்கி, ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸுடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த கல்கி, பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஹாலிவுட் தரத்திலான இந்தப் படத்தின் மேக்கிங், கிராபிக்ஸ், விஷுவல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கல்கி படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் செய்த ரசிகர்கள் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்தனர். இந்நிலையில், இன்று முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது கல்கி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி ரசிகர்களுக்கு அமேசான் ப்ரைமிலும், இந்தி ரசிகர்களுக்காக நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது கல்கி 2898 ஏடி.  

தமிழில் இன்னொரு முக்கிய படமான ஜமா, இந்த வாரம் முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ஜமா படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளது ஜமா. ஆக.2ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும், ஸ்க்ரீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஜமா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அமேசான் ப்ரைமில் வெளியாகும் ஜமா ஓடிடி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜா உட்பட ஏராளமான திரை பிரபலங்களும் ஜமா படத்தை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில், உணர்வுகள் தொடர்கதை திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது. தெலுங்கில், விராஜி (Viraaji) ஆஹா தளத்திலும், கிர்ர்ர் (Grrr) என்ற மலையாள திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகின்றன. ஸ்வகார்யம் ஸம்பவ பஹுலம் (Swakaryam Sambhava Bahulam) என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்தியில், முன்ஜ்யா (Munjya) ஸ்டார் கோல்ட் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல், பிரெஞ்சு மொழியில் நைஸ் கேர்ள்ஸ் (Nice Girls) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகிறது. ஆங்கிலத்தில் இன்கம்மிங் (Incoming) திரைப்படம், தி ஆக்ஸிடெண்ட் (The Accident) என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன.

அதேபோல், தி ஃப்ராக் (The Frog) என்ற கொரியன் வெப் சீரிஸ், GG Precinct, Terror Tuesday Extreme என்ற தாய்லாந்து வெப் சீரிஸ் ஆகியவையும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன. இதுதவிர பேபி ஃபீவர், மிஸ்ஸிங் 9 போன்ற வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. ராயன், கல்கி, ஜமா என இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு தரமான சினிமா விருந்து காத்திருக்கின்றன.