கோடிகள் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?....

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Jul 21, 2024 - 21:46
Jul 22, 2024 - 16:03
 0
கோடிகள் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?....
கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக ஆம்ஸ்ட்ராங் இருந்ததாக தகவல்

Armstrong Murder case : சென்னையின் புறநகர் பகுதிகளின் முக்கிய பிஸினஸ் ஸ்கிராப் பிஸினஸ். நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிகள் முழங்கும் பிசினஸை யார் கைப்பற்றுவது என்ற போட்டி நிழல் உலக தாதாகளுக்கு மத்தியில் எப்போதும் சண்டை நிலவி வருவது வழக்கம்.

ஏற்கனவே சோழவரம் நிலம் கைமாறுதல் தொடர்பான கட்டப் பஞ்சாயத்து, திருவள்ளூர் பில்டர்ஸ் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளில் நேரடியாக ஆம்ஸ்ட்ராங், பல்வேறு வகைகளில் ரவுடிகள் மற்றும் நிழல் உலக ராதாக்களோடு பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பிசினஸாக பார்க்கப்படும் ஸ்கிராப் பிசினஸிலும் ஆம்ஸ்ட்ராங் தரப்பின் தலையீடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில் தற்போது வரை சம்பவ இடத்திற்கு செல்லாமல் கட்டப்பஞ்சாயத்துகளை செய்து வந்தவர் சம்போ செந்தில் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்போ செந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனாம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த சிடி மணி காக்க தோப்பு பாலாஜி மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சம்போ செந்திலுக்கு எதிராக 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் தேனாம்பேட்டை போலீசாரால் பிறப்பிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சிஐடி நகரில் மனைவி தனியாக சம்போ செந்திலை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அதன் பிறகு ஓஎம்ஆர் பகுதிக்கு சென்றதாகவும் இருவருக்குள்ளும் விவாகரத்து ஆனதாகவும், ஆனால் அதன் பிறகு இருவரும் தலைமறைவாகியுள்ள விவகாரமானது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்போ செந்தில் மீது லுக் அவுட் நோட்டீஸ் தற்போது வரை இருந்து வரும் நிலையில் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதும் சம்போ செந்தில் தலைமறைவாக இருந்தாலும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்கும் ஸ்கிராப் பிஸினசில் ஆதிக்கம் செலுத்தி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆற்காடு சுரேஷ் படுகொலை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம், ஸ்கிராப் பிசினஸ் மோதல் விவகாரம் என பல கோணங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தற்போது விரிவடைந்துள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பாம் சரவணனின் சகோதரருமான தென்னரசு என்பவரைக் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே வைத்து அவரது குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஜெயபால் தலைமையிலான இந்த கூலிப்படைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்தாகவும் கொலையாளிகள் தங்குவதற்கு இடமளித்ததாகவும் ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் நம்பி வந்தனர்.

ஆனால், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை விசாரித்த பட்டினப்பாக்கம் போலீசார் ஏற்கனவே நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக எந்தவித விசாரணை அறிக்கையையும் வழங்கவில்லை. எனினும் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிய, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து முறையாக அறிக்கை தர வேண்டும் என தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க ஏற்கனவே சேகரிக்கப்பட்ட குற்றவாளிகள் கால் ரெக்கார்டு உள்ளிட்ட அறிவியல் ரீதியான தடயங்களை மீண்டும் ஆய்வு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் அப்போது பணியில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்களை மற்றும் காவலர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow