Vettaiyan: “டைரக்டர் சார் இது சூப்பர் சார்...” வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினி... வைரலாகும் வீடியோ!

தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aug 31, 2024 - 14:10
Aug 31, 2024 - 14:11
 0
Vettaiyan: “டைரக்டர் சார் இது சூப்பர் சார்...” வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினி... வைரலாகும் வீடியோ!
வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினிகாந்த்

சென்னை: ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து லைகா பேனரில் இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். அதன்படி முதல் படமாக லால் சலாம் வெளியானது. இந்தப் படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். லைகா – ரஜினி கூட்டணியில் உருவான இன்னொரு படத்தை தசெ ஞானவேல் இயக்கினார். வேட்டையன் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. 

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மல்லுவுட் ஹீரோ ஃபஹத் பாசில், டோலிவுட் நடிகர் ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டது. இதனையடுத்து இப்படத்தில் இருந்து அடுத்தடுத்து செம மாஸ்ஸான அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் ஆகியோர் வேட்டையன் படத்திற்காக டப்பிங் கொடுத்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வரிசையில் தற்போது தலைவர் ரஜினியும் வேட்டையன் படத்திற்கு டப்பிங் கொடுப்பதில் பிஸியாகிவிட்டார். கூலி படப்பிடிப்புக்காக விசாகப்பட்டிணம் சென்றிருந்த ரஜினி, சென்னை திரும்பிய வேகத்தில் வேட்டையன் படத்துக்காக டப்பிங் கொடுத்து வருகிறார். இந்த வீடியோவை படக்குழுவே தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேஷ்டி, சட்டையில் ஸ்டைலாக காரில் வந்து இறங்கும் ரஜினிகாந்த், நேராக ரெக்கார்டிங் ஸ்டுடியோ செல்கிறார். அங்கே ஸ்க்ரீனில் தனது சீனை பார்த்ததும், “டைரக்டர் சார் இது சூப்பர் சார், வெரி நைஸ்” என தசெ ஞானவேலை பாராட்டுகிறார். 

மேலும் படிக்க - விஜய்யின் கோட் படத்தில் அஜித்!

’குறி வச்சா இர விழனும்’ என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த டப்பிங் வீடியோ, ரஜினி ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேப்போல், செப்டம்பர் 20ம் தேதி வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வேட்டையன் ரிலீஸால், சூர்யாவின் கங்குவா படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால் அதன்பின்னரே வேட்டையன் ரிலீஸ் தேதி வெளியானது. ஒரேநாளில் இரண்டு மெக பட்ஜெட் படங்கள் வெளியானால் பாக்ஸ் ஆபிஸில் பஞ்சாயத்து வரும் என்பதால், கங்குவா ரிலீஸ் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கங்குவா டீம் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow