GOAT Movie Ticket : கள்ளச்சந்தையில் விற்பனையாகும் கோட் டிக்கெட்.. 4000 ரூபாயா? கொந்தளிக்கும் பொதுமக்கள்

GOAT Movie Ticket Price : புதுச்சேரி நடிகர் விஜய் நடித்து நாளை வெளியாக உள்ள கோட் திரைப்படத்திற்கு whats ஆப் குழு ஆரம்பித்து, ஆயிரம் முதல் 4000 ரூபாய் வரை டிக்கெட் திரையரங்குகளில் விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Sep 4, 2024 - 16:16
Sep 4, 2024 - 17:41
 0
GOAT Movie Ticket : கள்ளச்சந்தையில் விற்பனையாகும் கோட் டிக்கெட்.. 4000 ரூபாயா? கொந்தளிக்கும் பொதுமக்கள்
goat movie ticket sales rs 4000,

GOAT Movie Ticket Price : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் முன் பதிவு ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே தொடங்கிய நிலையில், பல இடங்களில் ரசிகர்கள் டிக்கெட்டுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். மகளிருக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் கள்ளச்சந்தையில் கோட் திரைப்படத்தின் டிக்கெட் 1000 ரூபாயில் இருந்து 4000 ரூபாய் வரை விற்பனையாவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் என்ற படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு மொத்தம் ரூபாய் 400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி. மீதமுள்ள 200 கோடியில்தான் படத்தின் மற்ற செலவு. விஜய்யின் சம்பளம் மட்டும் இவரது நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மொத்த பட்ஜெட்டினை விட அதிகம் ஆகும்.அதே நேரத்தில் படத்தின் டிக்கெட் விற்பனை இதுவரை ரூ.425 கோடியை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோட் படம் தமிழ் நாடு முழுவதும் உள்ள 1,100 திரையரங்குகளிலும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது.படத்தின் புரோமோசன் வேலைகளை உலகநாடுகள் முதல் உள்ளூர் வரை அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாகவே செய்துள்ளார். பல சேனல்களுக்கு பேட்டி அளித்து, படம் குறித்து பேசினார். 

பல இடங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. இதுமட்டும் இல்லமல், பல இடங்களில் ரசிகர்கள் டிக்கெட்டிற்காக இன்னமும் அலைந்துகொண்டு உள்ளனர். படத்திற்கு  சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஒருபக்கம் படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். பலர் டிக்கெட்டிற்காக அலைந்து கொண்டு இருக்கும்போது, தஞ்சாவூரை அடுத்துள்ள கும்பகோணம் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தினர், மகளிருக்கு தி கோட் படத்தின் டிக்கெட்டினை இலவசமாக வழங்கியுள்ளனர். இது தொடர்பான செய்திகள் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதனிடையே புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள 5 திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. நாளை காலை வெளியாகும் கோட் திரைப்படத்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில்  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் 

இந்நிலையில் டிக்கெட் விற்பனையானது தற்பொழுது புதுச்சேரியை பொறுத்தவரை சில திரையரங்குகளில் மட்டுமே நடைபெற்று வருவதால் டிக்கெட்டுகளை ரசிகர்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். மேலும் டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக whats app குழு ஆரம்பித்து அதிலும் 4 ஆயிரம் முதல் 1000 ரூபாய் வரை  டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் அண்ணாசாலையில் இயங்கி வரும் ராஜா திரையரங்கத்தில் திரையரங்க நிர்வாகமே வெளிப்படையாக அதிக விலைக்கு டிக்கெட்டை கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இளைஞர்கள் விஜய் படம் பார்க்க ஆர்வமாக இருக்கக்கூடிய நிலையில் வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவது மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்கள் போட்டு கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்கின்றனர் இதனால் பொதுமக்களின் பணம் நவீன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது மேலும் இதன் காரணமாக அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

 நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர் எனவே இந்த பணத்தை உரிய அதிகாரிகள் போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யும் திரையரங்கம் மீதும் அதிகப்படியான விலைக்கு டிக்கெட்டை விற்கும் நபர் மீதும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow