GOAT: கோட் படத்தில் நடிக்க மோகன், பிரபுதேவா வாங்கிய சம்பளம்... அடேங்கப்பா இத்தனை கோடியா..?
விஜய்யின் கோட் படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகன் வில்லனாகவும், பிரபுதேவா முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிக்க மோகன், பிரபுதேவா ஆகியோர் வாங்கிய சம்பளம் கொடுத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் நாளை (செப்.5) வெளியாகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தின் ஷூட்டிங் ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்றது. அதேபோல் டெக்னிக்கலாகவும் கோட் படத்திற்கு பெரிய பட்ஜெட்டை செலவழித்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.
ஆனால், அதைவிடவும் கோட் படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். முக்கியமாக விஜய்க்கே 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பிரசாந்துக்கு தான் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி கோட் படத்தில் நடிக்க பிரசாந்த் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். அவருக்கு அடுத்ததாக மைக் மோகனும் பிரபுதேவாவும் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
80களில் சில்வர் ஜுப்ளி ஹீரோவாக வலம் வந்தவர் மோகன். இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அதேபோல், ரசிகர்களால் செல்லமாக மைக் மோகன் என கொண்டாடப்பட்டார். ஒருகட்டத்தில் மொத்தமாக ஃபீல்ட் அவுட் ஆன மோகன், தற்போது கோட் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே வெங்கட் பிரபு தனது படங்களில் நடிக்க பலமுறை அழைப்பு விடுத்தும் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டதாகக் கூறியிருந்தார் மோகன். இப்போது கோட் மூலம் வெங்கட் பிரபு – விஜய் கூட்டணியில் இணைந்துள்ள மோகன், இப்படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
மேலும் படிக்க - கோட் படத்திற்கு பிரசாந்த் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?
அதேபோல், பிரபுதேவாவும் கோட் படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த போக்கிரி படத்தை இயக்கியுள்ள பிரபுதேவா, அவரது பல பாடல்களுக்கும் கோரியோகிராபி செய்துள்ளார். இதனால் விஜய் – பிரபுதேவா கூட்டணிக்கு ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், ஆன்ஸ்க்ரீனில் விஜய் – பிரபுதேவா கூட்டணி இணைந்துள்ளது இதுதான் முதன்முறை. விஜய்க்காகவே கோட் படத்தில் நடித்துள்ள பிரபுதேவாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் ஒர்த் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோரை தவிர மற்ற நடிகர்கள், நடிகைகளுக்கு லட்சங்களில் தான் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, மீனாட்சி செளத்ரி, சினேகா ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய் சம்பளம் என சொல்லப்படுகிறது. அதேபோல், யுவன் சங்கர் ராஜாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.
What's Your Reaction?