மோடி, பைடன்.. உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ..எலான் மஸ்க் வெளியிட்ட AI வீடியோ

Elon Muck AI Fashion Show : ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்த வீடியோ என்பது போல் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Jul 22, 2024 - 17:25
Jul 22, 2024 - 18:21
 0
மோடி, பைடன்.. உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ..எலான் மஸ்க் வெளியிட்ட AI வீடியோ
Elon Musk Ai Fashion Show World Leaders

Elon Muck AI Fashion Show : அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க்(Elon Musk) பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ(AI Fashion Show Video) அனைவரையும் கவர்ந்துள்ளது. 

அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்பு முதல் சமீபத்திய மைக்ரோசாப்ட் செயலிழப்பு வரை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கைதி உடையில் டொனால்டு டிரம்ப்(Donald Trump), சக்கர நாற்காலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden), ஒபாமா, மார்க் ஜூகர்பெர்க், நெற்றியில் திலகமிட்டு, வண்ணமயமான ஆடை அணிந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி(PM Narendra Modi), அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ஆப்பிள் சிஇஓ டிம் குக், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் பிரான்சிஸ் என வரிசையாக நடந்து வருகின்றனர்.

கடைசியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியை(Microsoft Service Outage) கிண்டலடிக்கும் வகையில், மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ மற்றும் இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி பல வண்ண நீண்ட கோட் அணிந்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் வரும் காட்சி பிகினி உடையில் கேட் வாக் செய்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு நேரடி ஆதரவை எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அதிபருமான ஜோ பைடன்(Joe Biden), உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow